சென்னை: இந்தியாவில் ஊழியர்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய வகையில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அண்மையில் CIEL HR Services என்ற மனித வள நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் ஸ்டார்ட் அப்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களில் 67% பேர் நன்கு நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்களில் பணி மாறுதல் பெற வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

பணி பாதுகாப்பு, சிறந்த ஊதியம் மற்றும் நிதி ரீதியான ஸ்திரத்தன்மை ஆகிய மூன்று காரணங்களுக்காக இந்த ஊழியர்கள் ஸ்டார்ட் நிறுவனங்களில் இருந்து நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு மாறுவதை விரும்புவதாக கூறியுள்ளனர். ஸ்டார்ட் அப் துறைகளில் வேலைக்கு சேர்பவர்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறி விடுகின்றனர் என்ற ஒரு தகவலையும் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை அடிப்படையாகக் கொண்ட மனித பல நிறுவனமான CIEL HR Services ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்ற கூடியவர்களின் 40% பேருக்கு ஜாப் செக்யூரிட்டி எனப்படும் பணி பாதுகாப்பு தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது என தெரிவித்துள்ளது.
மேலும் 30 % பேர் சிறந்த ஊதியம் வேண்டும் என்ற காரணத்திற்காக பெரிய நிறுவனங்களுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். அது மட்டும் இன்றி 25 % ஸ்டார்ட் ஊழியர்கள் தங்களால் work-life balance செய்ய முடியவில்லை என்பதற்காகவே பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் இந்தியாவில் ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சி , வேலை வாய்ப்பு, புதுமையான கண்டுபிடிப்புகள் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என CIEL HR Services நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆதித்யா நாராயணன் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 65 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரும் நாட்களில் தங்கள் நிறுவனங்களில் கூடுதல் எண்ணிக்கையிலான ஆட்களை வேலைக்கு எடுக்க உள்ளன என சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நம்பிக்கை தரக்கூடியவையாக இருக்கிறது என கூறியுள்ளார். இருப்பினும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதாவது ஊழியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, work-life balance ஐ உறுதி செய்வது மற்றும் வேலையில் அவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட அவற்றை வணங்குவது என்பன உள்ளிட்டவற்றை அதிகரித்தால் அவர்களால் நிச்சயம் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரிய நிறுவனங்களை நாடிச் செல்வது குறையும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றி வரக்கூடிய 1.30 லட்சம் ஊழியர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தான் இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது. தற்போது ஸ்டார்ட் அப் துறைகளில் பெரும்பாலும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் வேலைக்கு தான் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக கூறியுள்ளது.
ஸ்டார்ட் அப் துறையில் கிட்டதட்ட 18 சதவீத வேலை வாய்ப்புகள் சாப்ட்வேர் டெவலப்மெண்டிற்கு உள்ளதாம். அடுத்ததாக சேல்ஸ்,ப்ரீ சேல்ஸ், ரீடைல் மற்றும் என்டர்பிரைஸ் சேல்ஸ் ஆகியவற்றுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications