லண்டன்: ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும் என்பது தான் பலரது எண்ணம். ஆனால் வேலை, நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானவர்களால் அதை பின்பற்ற முடிவதில்லை.
அப்படி இருப்பவர்களுக்கு எளிதான முறையில் அவர்கள் வீட்டிற்கே வந்து சத்தான உணவினை டெலிவரி செய்தால் நிச்சயம் அதற்கு சிறந்த வரவேற்பு இருக்கும். அப்படி ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரின் மருமகள்.

சாக்சி சாப்ரா மிட்டல் லண்டனில் ஃபுட் ஹேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்ற ஒரு இலக்கை நோக்கி தொடங்கப்பட்ட நிறுவனம் இது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆயுர்வேதத்தின் கொள்கைகள் ஆகியவற்றை இணைத்து அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்ற நோக்கத்தில் உணவு டெலிவரி செய்து வருகிறது. லண்டனில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபுட் ஹேக், இந்த நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான சாக்சி சாப்ரா மிட்டல் இந்திய பெரும் பணக்காரரான சுனில் மிட்டலின் மருமகள் ஆவார். சுனில் மிட்டலின் சொத்து மதிப்பு 76,730 கோடி ரூபாயாகும்.

பிரிமிங்காம் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி பிரிவில் பிஎஸ்சி பயின்ற இவர். பின்னர் எம்பிஏ முடித்தார். ஃபைசர் மற்றும் லண்டனை அடிப்படையாகக் கொண்ட எபிக் பிரைவேட் ஈக்விட்டி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.
பின்பு சாஃப்ட் பேங்கில் பணி கிடைத்தது. கிட்டதட்ட 10 ஆண்டுகள் இப்படி பல்வேறு நிறுவனங்களில் இவர் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
இவருக்கும் ஷரவின் மிட்டலுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்தவர்கள். சாக்சி கருத்தரித்திருந்தபோது அரிதான ஒரு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைக்கு மாறினார். இதன் மூலம் அவரது உடல்நிலை சீரானது மற்றும் அவர் மிக ஆரோக்கியமான முறையில் உணர்ந்தார். எனவே இதனை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் ஆரம்பித்தது தான் ஃபுட் ஹேக்.
ஃபுட் ஹேக் தளத்தில் இதற்காக வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் பல்வேறு மெனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதற்கு என்னென்ன சாப்பிட வேண்டும், குறிப்பிட்ட அளவு உடல் எடையை குறைப்பதற்கு மீல் பிளானிங் போன்ற பல்வேறு வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
நமது தேவைக்கேற்றவாறு நாம் நமக்கு சொந்தமான ஒரு மீல் பிளானை உள்ளீடு செய்தால் அதற்கேற்றவாறு இவர்கள் உணவினை நமக்கு டெலிவரி செய்வார்கள்.
நீண்ட கால அடிப்படையில் உடலை வலுவாக வைத்துக் கொள்வது, உடல் எடை குறைப்பு, ஆயுர்வேதம் அடிப்படையில் உடலை சுத்தப்படுத்தும் உணவுகள், கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கக்கூடிய உணவுகள் அதேபோல கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மீள் பிளான்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி நாம் ஆர்டர் செய்யக்கூடிய உணவில் என்னென்ன சத்து உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இவர்கள் வழங்குவதால் தற்போது இது லண்டனில் மிகப் பிரபலமான ஒரு சேவையாக மாறியுள்ளது.
Story written by : Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications