தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொடுக்க இருக்கும் வேளையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சர்வதேச MSME நாள் விழாவில் சுமார் 1723.05 கோடி ரூபாய் அளவிலான முதலீடு உறுதி செய்யப்பட்டது.
இந்த விழாவில் SC/ST பிரிவில் தொழில்முனைவோர்-ஐ உருவாக்கும் சிறப்பு அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு இந்த 1723.05 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதோடு தமிழ்நாடு அரசின் FaMe TN மற்றும் SIDBI (Small Industries Development Bank of India) அமைப்புகள் மத்தியில் சுமார் 1510 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 7400 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாபெரும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைவிட முக்கியமாக 153.22 கோடி மதிப்பீட்டில் சுமார் 21,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு ஏதுவாக செங்கல்பட்டு மாவட்டம் கோடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 3 புதிய தொழிற்பேட்டைகளை அதாவது இண்டஸ்ட்ரீயல் பார்க்-ஐ முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் கடலூர் மாவட்டத்தின் கடம்புலியூர் பகுதியில் விவசாயிகள் பலன் பெறும் வகையில் முந்திரி-க்கான பிராசசிங் கிளஸ்டர் (cashew processing cluster), எம்எஸ்எம்இ கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.16 கோடியில் அமைக்கப்பட்டதை முதல்வர் திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்கு அரசு மானியமாக 1.81 கோடி ரூபாய் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட்அப் இந்தியா பிளாட்பார்ம் தளத்தின் தரவுகள் படி தமிழ்நாட்டில் மட்டும் 6257 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் கடந்த 2 வருட ஸ்டாலின் ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2016 முதல் 2021 காலக்கட்ட எண்ணிக்கை காட்டிலும் 2 மடங்கு அதிகம் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
More From GoodReturns

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?



Click it and Unblock the Notifications