டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் மேஜர் மாற்றம்: மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மதுபான சில்லறை விற்பனை கடைகளை நிறுவி மதுபானங்களை விற்பனை செய்கிறது. டாஸ்மாக் மதுபானங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அரசின் வருவாயில் கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்கப்படுகிறது, டாஸ்மாக் மது விற்பனையில் ஊழல் நடக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில் புதிய உத்தரவை டாஸ்மாக் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கையில் பணமாக கொடுத்து மதுபானம் வாங்க முடியாது.

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் மேஜர் மாற்றம்: மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு..!!

புதிய வழிகாட்டுதல்களின்படி, வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல், வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மதுபானங்களை வாங்கினால், ரொக்கமாக பணத்தை கொடுப்பதற்கு பதிலாக கட்டாயம் பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் முறைகளையே பயன்படுத்த வேண்டும். அதாவது 1000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்கினால் கையில் காசு தரக்கூடாது டிஜிட்டல் வழியில் யூபிஐ அல்லது கார்டு வழிகளில் தான் செலுத்த வேண்டும்.

Also Read

இந்த விதி மேலும் கடுமையாக்கப்பட்டு, ஜனவரி 1 முதல், 500 ரூபாக்கு மேல் மதுபானம் வாங்கினால் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். அதாவது 500 ரூபாய்க்கு மேல் ரொக்கம் ஏற்றுக்கொள்ளப்படாது. டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் இந்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும், அனைத்து பரிவர்த்தனைகளும் குறிப்பிட்ட முறைகளின் வழியே நடைபெறுவதை உறுதி செய்யவும் புதிய விதிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும், அந்தந்த வங்கிகளின் முறைப்படுத்தப்பட்ட அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட PoS - Point of Sale இயந்திரங்கள் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் நிறுவப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended For You

இந்த இயந்திரங்கள் தடையின்றி வேலை செய்வதையும், ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால் உடனடியாக சரி செய்யப்படுவதையும் மாவட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான அதிகாரிகள் இந்த விதிகள் அனைத்து கடைகளிலும் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுத்தல், ரொக்க பணத்தை கையாள்வதை குறைத்தல் மற்றும் ஒட்டுமொத்த விற்பனை முறையிலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவையே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+