பண பிரச்சனையா? இந்த 5 திட்டங்கள் பத்தி தெரிஞ்சா தைரியமா தொழில் தொடங்குவீங்க..!

இந்தியாவில் சிறு தொழில் தொடங்கும் நபர்களுக்கு உதவி செய்வதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சிறு தொழில் தொடங்குவதற்கு இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஐந்து முக்கியமான கடன் வழங்கும் திட்டங்கள் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அரசு செயல்படுத்தக்கூடிய சிறு தொழில் கடன் திட்டங்களில் மற்ற கடன்களை ஒப்பிடும்போது வட்டி விகிதங்கள் குறைவானதாக இருக்கும். குறிப்பாக இதில் எந்த ஒரு பொருளையும் அடமானம் வைக்க வேண்டிய தேவை இருக்காது.

பண பிரச்சனையா? இந்த 5 திட்டங்கள் பத்தி தெரிஞ்சா தைரியமா தொழில் தொடங்குவீங்க..!

இத்தகைய திட்டங்களில் நாம் கடன் வேண்டி விண்ணப்பம் செய்தால் விரைவாக நம்முடைய விண்ணப்பங்கள் நடைமுறைப்படுத்தப்படும். பணத்தை திரும்ப செலுத்துவதற்கான காலத்தில் குறிப்பிட்ட சில நெகிழ்வு தன்மைகள் கிடைக்கும். அதுபோக சில கடன்களுக்கு அரசே வட்டி மானியம் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது.

எம்எஸ்எம்ஈ கடன் திட்டம் (MSME loan scheme): சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் அதிகபட்சம் 1 கோடி ரூபாய் வரை கூட தொழில் கடன் கிடைக்கும். இதில் 8% என்ற குறைந்த வட்டியிலேயே ஒருவர் கடன் பெறலாம். 8 முதல் 12 நாட்களிலேயே கடன் விண்ணப்ப நடைமுறைகள் முடிக்கப்படும். எனவே நல்ல ஐடியா இருக்கிறது ஆனால் பெரிய தொகை மூலதனமாக இல்லை என்பவர்கள் இதில் கடன் பெறலாம்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri MUDRA Yojana ) : எந்த அடமானமும் இல்லாமல் மைக்ரோ மற்றும் சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் திட்டம் இது. குறிப்பாக பெண் தொழில் முனைவோருக்கான பிரத்யேக திட்டம் இதுவாகும்.சிறு தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என நினைக்கும் பெண்கள் இதில் எளிதாக கடன் பெறலாம். கடனை திரும்ப செலுத்துவதிலும் சலுகைகள் இருக்கின்றன.

நேஷ்னன் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் ( National Small Industries Corporation) : தொழில்முனைவோருக்கு தேவையான நிதி, மார்க்கெட்டிங் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை இது செய்து தருகிறது. சிறு தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு அதற்கான கடனை வழங்குவதோடு மட்டுமில்லாமல் எப்படி பொருளை சந்தைப்படுத்த வேண்டும் அதற்கு எப்படி திட்டமிட வேண்டும், எப்படி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே சிறு தொழில் முனைவோர் மத்தியில் இது புகழ்பெற்ற திட்டமாக இருக்கிறது.

கிரெடிட் லிங்குடு கேபிடல் சப்சிடி திட்டம் (Credit-Linked Capital Subsidy Scheme) : தங்கள் தொழிலில் தொழில்நுட்ப ரீதியிலான அப்டேட் செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டவர்களுக்கு இது உதவியானதாக இருக்கும். உற்பத்தி, மார்க்கெட்டிங், உள்ளிட்ட பல துறை சார்ந்த தொழில்களுக்கும் இதனை பயன்படுத்தலாம். ஏற்கனவே ஒரு தொழில் செய்து வருபவர்கள் அதனை மேம்படுத்த வேண்டும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என விரும்பினால் இந்த திட்டம் அவர்களுக்கு உகந்தது.

ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா (SIDBI -Small Industries Development Bank of India): சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில்களை சேர்ந்தவர்கள் எளிதாக இதில் கடன் பெறலாம். 10 லட்சம் முதல் 25 கோடி வரை கடன் கிடைக்கும் . கடனை திரும்ப செலுத்தும் காலத்தை 10 ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்து கொள்ளலாம். 1 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு அடமானம் எதுவும் தேவையில்லை.

Story Written By: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+