இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், நாட்டின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியில் மூழ்கியுள்ளது.
அதுவும் இந்த முறை அனுபவம் பெற்ற ஊழியர்களை விடவும் பிரஷ்ஷர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகளை அளித்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முக்கிய நிறுவனங்கள்
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஸ்னாப்டீல், பேடிஎம், ஷாப்கூளுஸ் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் ஸ்டார்ட்அப் சந்தையில் தற்போது உருவாகியுள்ள வேலைவாய்ப்புகளில் 90 சதவீதம் இந்த 4 நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டவை.
தொழில்நுட்ப நிறுவனங்கள்
ஸ்னாப்டீல், பேடிஎம், ஷாப்கூளுஸ் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது பில்லியன் டாலர் அளவிற்கும் அதிகமான மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களாக இருப்பதால் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேகம் உருவாகும் எனத் தெரிகிறது.
பிரஷ்ஷர்கள்
ஸ்டார்ட்அப் யூனிகார்ன் என்று அழைக்கப்படும் ஸ்னாப்டீல், பேடிஎம், ஷாப்கூளுஸ் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 57 சதவீதம் பிரஷ்ஷர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
ஸ்னாப்டீல், பேடிஎம், ஷாப்கூளுஸ் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களைத் தவிர ஹைக் மெசஞ்சர், இன்மொபி, மு சிக்மா, ஓலா கேப்ஸ், ரீநிவ் பவர், சோமேட்டோ ஆகிய நிறுவனங்களும் பிரஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
30 சதவீத வளர்ச்சி
இந்திய ஈகாமர்ஸ் சந்தையை வருடத்திற்கு 30 சதவீதம் அளவிலான வர்த்தக உயர்வு பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2026ஆம் ஆண்டுக்குள் இத்துறை 200 பில்லியன் டாலர் அளவிலான சந்தையாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் ஸ்னாப்டீல், ஷாப்கூளூஸ் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் வர்த்தகத்தில் திடீர் வளர்ச்சியைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளது.
போராட்டம்
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் நிலையில், மறுபுறம் பேடிஎம், சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications