சென்னை: இந்தியாவில் சிறுதொழில் (MSMEs) துறை பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுதொழில் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்து லாபம் பெறுவதற்கு, அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் உத்யம் பதிவு (Udyam Registration). உத்யம் பதிவு செய்துவைப்பதால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு என்னென்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.
உத்யம் பதிவு என்றால் என்ன?: உத்யம் பதிவு என்பது மைக்ரோ, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) இணையவழி பதிவு தளமாகும். இதனை MSME அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம், சிறுதொழில் நிறுவனங்கள், பல்வேறு அரசு வழங்கும் சலுகைகளைப் பெற தகுதி பெறுகின்றன. உத்யம் பதிவு செய்வது கட்டாயம் அல்ல என்றாலும், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இதனை ஆங்கிலத்தில் "Udyam Registration" என்று கூறுவர்.

சிறுதொழில்களுக்கு உத்யம் பதிவின் நன்மைகள் என்ன?:
அரசு திட்டங்களுக்கான தகுதி: உத்யம் பதிவு செய்வதன் மூலம், சிறுதொழில் நிறுவனங்கள், கடன் மானியங்கள் (subsidies) மற்றும் வங்கிக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களுக்கான தகுதி பெறுகின்றன. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் டெண்டர்களில் கலந்து கொள்வதற்கும் உத்யம் பதிவு அவசியம். பல அரசு டெண்டர்கள் உத்யம் பதிவு பெற்ற நிறுவனங்களுக்கே ஒதுக்கப்படுகின்றன. உத்யம் பதிவு செய்வது அணைத்து MSME-களுக்கும் இலவசம். நீங்கள் எந்த வித பதிவு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
சந்தை விரிவாக்கம்: உத்யம் பதிவு பெற்ற நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதன் மூலம், உங்கள் நிறுவனம் பற்றிய தகவல் வாடிக்கையாளர்களிடம் எளிதில் சென்றடையும். இது உங்கள் சந்தை விரிவாக்கத்திற்கு உதவும்.
வங்கிக் கடன் பெறுதல்: உத்யம் பதிவு பெற்றிருப்பது வங்கிகளுக்கு உங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இதன் காரணமாக, வங்கிகளிடம் கடன் பெறுவது எளிதாகும். மேலும் குறைந்த வட்டி விகிதங்களில், நீங்கள் கடன் பெற முடியும்.
மின்சாரக் கட்டண சலுகை: உத்யம் சான்றிதழ் வைத்திருப்பதால் மின்சாரக் கட்டணங்களில் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. உத்யம் பதிவு செய்த MSME கள், வருமான வரிச் சலுகைகள் மற்றும் பிற வரிச் சலுகைகளை பெற தகுதியுடையவை.
அரசு கொள்முதல்களில் பங்கேற்க உதவுகிறது: பல்வேறு அரசு கொள்முதல்களில் MSME கள் பங்கேற்க உத்யம் பதிவு சான்றிதழ் தேவைப்படுகிறது. உத்யம் பதிவு செய்த MSME கள், எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும்.
வணிக வாய்ப்புகளை அதிகரிக்கிறது: உத்யம் பதிவு செய்த MSME கள், பல்வேறு வணிக வாய்ப்புகளை பெற முடியும். உத்யம் பதிவு MSME-களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications