பிரபல எஜூடெக் தளமான அன்அகாடமி நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டில் ஊதிய உயர்வு இல்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் அன்அகாடமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌரவ் மஞ்சல் ஊழியர்களை காணொலி வாயிலாக சந்தித்து பேசினார். அப்போது அவர் நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்ற அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்போது அவர் 400 அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பர்பரி டி-ஷர்டினை அணிந்திருந்தது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
கஷ்டப்பட்டு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை என அறிவிக்கும் போது அவர் 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டி-ஷர்டை அணிந்திருந்தது ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை எழுப்பியுள்ளது. முன்னதாக ஊழியர்களிடம் பேசிய கௌரவ் மஞ்சல் 2023 ஆம் ஆண்டு அன்அகாடமி நிறுவனத்திற்கு மிகவும் சராசரி ஆண்டாக தான் அமைந்திருந்தது. 2024 ஆம் ஆண்டில் ஓரளவு நிறுவனம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் எதிர்பார்த்த வளர்ச்சியினை எட்டவில்லை எனக் கூறினார்.

எதிர்பார்த்த வளர்ச்சி இலக்கினை எட்ட முடியாத காரணத்தால் நடப்பாண்டில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என அவர் தெரிவித்தார். அப்போது பெரும்பாலான ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்ற கருத்தினை முன் வைத்த போது ஊழியர்கள் பரந்த மனப்பான்மையுடன் இதனை அணுக வேண்டும்.
சந்தையில் நமது போட்டி நிறுவனங்கள் எல்லாம் தோல்வியடைந்து வருகின்றன என மறைமுகமாக பைஜூஸ் நிறுவனத்தை சுட்டிக்காட்டினார். நாம் இன்னும் சந்தையில் நீடித்து நிற்கிறோம் தொடர்ந்து நாம் தொழில் புரிந்து வருகிறோம் எனவே ஊழியர்கள் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கௌரவ் மஞ்சல் கலந்து கொண்ட புகைப்படத்தை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஊழியர் ”ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை ஆனால் இவரது டீசர்ட்டை பாருங்கள் இதன் மதிப்பு மட்டும் 400 அமெரிக்க டாலர்கள்” என பதிவிட்டுள்ளார். இதுபோன்ற தலைமை செயல் அதிகாரிகள் தங்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் குறைத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் அவர்களுக்காக தொழிலை நடத்த பாடுபடும் ஊழியர்களுக்கு ஊதியத்தை சேர்த்து கொடுப்பதற்கு தயங்குகிறார்கள் என ஒரு பயனாளர் சாடியுள்ளார்.
ஒரு பயனாளரோ நிறுவனம் தோல்வி அடைந்தால், ஏன் கீழ்நிலை ஊழியர்கள் மட்டுமே அதன் பலனை அனுபவிக்க வேண்டும், ஒரு நிறுவனம் வளர்ச்சி அடையவில்லை என்றால் மேல் நிலையில் இருப்பவர்களும் தானே அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என வினவியுள்ளார்.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications