இந்தியாவில் இருந்து நிறைய பேர் அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கின்றனர், பின்னர் அங்கேயே நல்ல வேலையில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இதில் சிலர் மட்டுமே பல ஆண்டுகள் வேலை பார்த்தபின்பும் இந்தியாவுக்குத் திரும்பி வருகின்றனர். அப்படி வந்தவர்களில் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி விடுவது இயல்பான ஒன்று.
அப்படி வாணி கோலாவும் அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் ஒரு தொழிலைத் தொடங்கியது தான் கலாரி கேபிடல்.

60 வயதான வாணி கோலா அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் 22 காலம் பணியாற்றியவர். 1980களில் அமெரிக்காவுக்குச் சென்ற வாணி கோலா அங்கு அரிஸோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங்கில் முதுநிலை பட்டம் முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ஹைதராபாத்தில் பிறந்த வாணி கோலா உஸ்மானயா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இஞ்சினியரிங்கில் பட்டப்படிப்பை முடித்தார். இந்தியாவுக்கு வந்து தான் பிறந்து வளர்ந்த ஹைதராபாத்தில் கலாரி கேபிடலைத் தொடங்கினார்.
2006ல் இந்தியா திரும்பிய வாணி கோலா வினோத் தாம், கௌர் ஷிரலாகி ஆகியோருடன் சேர்ந்து இந்திய அமெரிக்க வென்சர்ஸ் பார்ட்னர்ஸ் ஃபண்டை தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு நியூ எண்டர்பிரைசஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் பக்கபலமாக இருந்தது. ஒருக்கட்டத்தில் இந்த பண்டில் இருந்து நியூ எண்டர்பிரைசஸ் அசோசியேட்ஸ் வெளியேறியது.
2012இல் தனது நிறுவனத்தை கலாரி கேபிடல் என்று பெயர் மாற்றம் செய்தார். இந்த முதலீட்டு நிதியை 3 பேர் கூட்டணியில் துவங்கப்பட்டது, தற்போது கலாரி கேபிடல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார் வாணி கோலா. இந்தியாவின் பிரபலமான துவக்கநிலை வென்சர் கேப்பிடல் நிறுவனம் தான் கலாரி கேபிடல்.
தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் 850 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு 110 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளது.
இ-காமர்ஸ், மொபைல் சர்வீஸ், கல்வி, ஹெல்த்கேர் போன்ற சேவைகளில் அவரது நிறுவனம் ஈடுபட்டது. க்யூர்.ஃபிட் உள்பட பல்வேறு தொழில்களில் அவரது நிறுவனம் முதலீடு செய்தது.
அமெரிக்காவில் அவர் டெக்னாலஜி துறையில் வேலை செய்தார். எம்ப்ரோஸ் மற்றும் கண்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து அவர் 1996இல் ரைட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். செர்டஸ் சாப்ட்வேர் என்ற நிறுவனத்தில் சிஇஓவாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு தொழில்முனைவோராக இருந்தாலும் அவருக்கு புத்தகங்கள் படிப்பது, எழுதுவது போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளது. வாணி கோலாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications