ஈரான் போர் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. போர் தொடங்கிய முதல் ஒருவார காலம் பெரிய அளவில் எந்த நாடுகளும் அதன் பாதிப்பை கணிக்கவில்லை. ஆனால் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் பல்வேறு நாடுகளிலும் ஈரான் போரின் தாக்கம் மிக வலுவாக எதிரொலிக்கிறது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ,எல்பிஜி தட்டுப்பாடு, உரங்களுக்கான தட்டுப்பாடு என வரிசையாக அடுத்தடுத்த பிரச்சினைகளை உலக நாடுகள் எதிர்கொள்ள தொடங்கியிருக்கின்றன. நிலைமை இப்படியே சென்றால் ஒட்டுமொத்த உலகின் உணவு பாதுகாப்புக்கே பிரச்சனை வரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. போர் தொடங்கிய மூன்று வார காலம் முடியப்போகிறது இருந்தாலும் போர் எதை நோக்கி செல்கிறது என்பதை இதுவரை தெரியவில்லை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பெருமளவிலான ஆயுதங்களை போரில் பயன்படுத்தி இருக்கின்றன. ஈரானும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் யார் வெற்றியாளர் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அமைதி பேச்சுவார்த்தை போர் நிறுத்த ஒப்பந்தம் என எதுவுமே தொடங்கவில்லை. இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய அனைவருமேநினைத்தால் தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
ஆனால் ஈரான் போரில் மறைமுக வெற்றியாளராக உருவெடுத்திருக்கிறது ரஷ்யா. உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இருக்கிறது இது ரஷ்யாவுக்கு பெரிய அளவில் லாபம் தரக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிடம் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கினால் உங்களுக்கு கூடுதல் வரி என அறிவித்த அமெரிக்காவே தற்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள் என சலுகை தரும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகிற்கு தேவையான பெரிய அளவிலான கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இருக்கிறது. இது ரஷ்யாவுக்கு தொழில் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின்படி ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நாளில் இருந்து ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையை அதிகரித்து இருக்கிறதாம். ஒவ்வொரு நாளும் ரஷ்யாவிற்கு எண்ணெய் விற்பனையின் மூலம் மட்டும் கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறதாம்.
அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக பல்வேறு நாடுகளும் இதற்கு முன் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அவை எல்லாமே தற்போது ரஷ்யாவை நோக்கி படை எடுத்துள்ளன. இதற்கு முன்பு இந்தியாவுக்கு சர்வதேச விலையில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யா , அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டதால் சந்தை விலைக்கு தான் தருவோம் என உறுதியாக தெரிவித்து விட்டது.
அந்த வகையில் ஈரான் போர் ரஷ்யாவுக்கு நல்ல வருமான வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. அமெரிக்காவும் தற்போதைக்கு எண்ணெய் சந்தை நிலைமையை கட்டுக்குள் வைக்க ரஷ்யா எண்ணெய் விநியோகத்திற்கு எந்த ஒரு தடையும் விதிக்காமல் இருக்கிறது. எனவே போர் நீடிக்கும் வரை ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனையும் களைகட்டும் லாபமும் அள்ளும்.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?



Click it and Unblock the Notifications