அட்வான்ஸ்டு பேட்டரி டெக்னாலஜி நிறுவனமான லாக்9 மெட்டீரியல்ஸ் 'டே ஜீரோ 2024' என்ற நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட நாராயண மூர்த்தி தொழில்முனைவு குறித்து விரிவாகப் பேசினார்.
தொழில்முனைவு என்பது ஒரு மனநிலை ஆகும். அது ஒருசிலரைப் போல் கம்பெனிகளைத் தொடங்குவது அல்ல.

விரைவாக விஷயங்களை செய்வதும், போட்டியில் முன்னிலை வகிக்க உங்களை தயார் செய்வதும் சிறப்பான பணியாற்றலுக்கு தயார்படுத்துவதும் ஆகும் என்று இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறினார்.
எல்லாரும் ஒரு தொழிலதிபராக ஆக முடியும். ஏனென்றால் அது அவர்களது விருப்பம் ஆகும். அதேவேளையில் தாங்கள் எந்தளவுக்கு விஷயங்களை விரைவாகச் செய்ய முடியும், விலை மலிவாகச் செய்ய முடியும், சிறப்பாகச் செய்ய முடியும் என்பது இருக்கிறது.
ஒரு நிறுவனம் நீண்டநாள் நிலைத்திருப்பதற்கு சில மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலில் மார்க்கெட்டில் நிறுவனம் இருக்க வேண்டும். மார்க்கெட்டில் நிறுவனம் நிலைத்திருக்காவிட்டால் உங்களது யோசனை எவ்வளவு தான் சிறந்ததாக இருந்தாலும் அதன் மதிப்பு பூஜ்ஜியம்தான்.
இரண்டாவதாக சிறந்த திறன் இருக்க வேண்டும். தரமான மனநிலை கொண்டவர்களை வேலைக்குச் சேர்த்தால் தான் நிறுவனம் வெற்றியை எட்டும். ஏனென்றால் மனித மனம் புதுமைகளை கண்டுபிடித்து அதை செயலுக்குக் கொண்டு வரும்.
எனவே உங்களுக்குள்ள பெரிய பொறுப்பு என்னவென்றால் சிறந்தவர்களை பணியமர்த்துவதும் அதன்மூலம் சிறந்தவற்றை பெறுவதும் ஆகும் என்றார் நாராயண மூர்த்தி.
இந்த நிகழ்ச்சியின்போது லாக்9 ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக அதன் மொபிலிட்டி பிசினஸை ஆம்ஃபியன் என்று ரீபிராண்டு செய்தது. இந்த ஆம்ஃபியன் ஒரு ஃபுல் ஸ்டேக் இவி அசட் மேனேஜ்மென்ட் கம்பனியாகும்.
இதுபற்றி லாக்9 சிஇஓ அக்ஷய் சிங்கல் கூறுகையில், ஆம்ஃபியனில் டிரான்ஸ்போர்ட் ஆபரேட்டர்களுக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஜீரோ தினத்தில் முக்கியமானதொரு பயணம் தொடங்குகிறது. இது நமக்காக மட்டுமல்லாமல் இந்த ஒட்டுமொத்த இகோ சிஸ்டத்துக்கும் ஆனதாக உள்ளது என்றார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications