தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய அரசு வழங்கும் முக்கிய திட்டங்களில் கடன் உத்தரவாத திட்டமும் ஒன்று. இதன் மூலம் பிணை அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து எம்.எஸ்.எம்.இ- க்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை CGTMSE என்ற கிரெடிட் குவாரண்ட்டி ஃபண்ட் டிரஸ்ட் ஃபார் மைக்ரோ அண்ட் ஸ்மால் எண்டர்பிரைசஸ் அமைப்பு செயல்படுத்துகிறது. இந்த அமைப்பானது இந்திய எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் மற்றும் சிட்பியும் (SIDBI) இணைந்து நிறுவியதாகும்.
இந்த திட்டத்தின் கீழ் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு 10 கோடி ரூபாய் வரையிலான கடன் உதவிக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இது பொதுவாக 75% - 85% வரையில் தான் வழங்கப்படுகிறது. சில பிரிவுகளுக்கு மட்டும் 90% வரையில் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இது டெர்ம் லோன் மற்றும் ஓர்க்கிங் கேப்பிட்டல் பெசிலிட்டி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். இது புதிதாக தொழில் தொடங்குபவர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மைக்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

முக்கிய சவால்: பொதுவாக ஆரம்ப நிலையில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதே பணம் தான். அந்த நிதியானது பிணை இல்லாமல் கிடைக்கிறது என்றாலே, நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதல் கொடுக்கும். குறிப்பாக புதிய தொழில் முனைவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு கடன் தொகையில் உத்தரவாத கவரேஜ் 80 - 90% வரையில் கிடைக்கிறது. இந்த உத்தரவாத கடன்களுக்கான கட்டணங்கள், கடன் தொகை மற்றும் கடன் வகையை பொறுத்து 0.37% முதல் 1.35% வரையில் இருக்கும். இதில் கடன் அபாயம் குறைவாக இருப்பதால், மற்ற கடன்களை காட்டிலும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க உதவிகரமாக இருக்கும்.
ஹைபிரிட் பிணை: சில சமயங்களில் கடன் வாங்க நினைக்கும் குறு, சிறு அல்லது நடுத்தர நிறுவனங்கள் ஒரு பகுதிக்கு மட்டுமே பிணைப் பெற நினைக்கலாம். அந்த வகையான கடன்களுக்கும், அதாவது கடனின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பிணைப் பெற வங்கிகள் அனுமதிக்கின்றன. இது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்த வழிவகுக்கலாம். அதிக கடனை வழங்க வங்கிகளை ஊக்குவிக்கலாம். ஆக அதிக கடன் பெற நினைக்கும் நிறுவனங்கள் ஹைபிரிட் பிணை என்ற அம்சத்தை பயன்படுத்தி பயனடையலாம்.
எப்படி விண்ணப்பிப்பது: தொழில் முனைவோர் எம்.எஸ்.எம்.இ -ஐ பதிவு செய்த உதயம் (Udyam) சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் உறுப்பினராக உள்ள எந்தவொரு வங்கியையோ அல்லது நிதி நிறுவனத்தையோ அணுகி கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதோடு உங்கள் வணிகத் திட்டம் மற்றும் பிற தேவையான ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும்.
கட்டணங்கள்: CGTMSE திட்டத்தின் கீழ் ஒருவர் உத்தரவாதம் பெற வேண்டுமெனில், கடன் வாங்குபவர் வங்கி மூலம் வருடாந்திர உத்தரவாத கட்டணத்தை (Annual Guarantee Fee) அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் கடன் தொகை மற்றும் வகையை பொறுத்து 0.37% முதல் 1.35% வரையில் இருக்கும். இந்த கட்டணத்தை நீங்கள் நேரடியாக செலுத்த தேவையில்லை. மாறாக உங்களுக்கு கடன் வழங்கும் வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ, உங்களிடம் இருந்து இந்த கட்டணத்தை வசூலித்து CGTMSE அறக்கட்டளைக்கு செலுத்தும். இந்த கட்டணம் ஆண்டு கட்டணம் அல்லது ஒரு முறை மட்டும் செலுத்தும் கட்டணமாகவும் இருக்கலாம். ஆக கடன் வாங்கும் முன்பே அதை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
எவ்வளவு கட்டணம்: CGTMSE அறக்கட்டளைக்கு செலுத்தும் கட்டணமானது 5 லட்சம் வரையிலான கடன் வரம்பிற்கு ஆண்டு உத்தரவாத கட்டணமாக, கடனில் சுமார் 0.37% முதல் 0.75%மும், 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான கடன் வரம்புக்கு, கடனில் சுமார் 0.55% முதல் 0.85% கட்டணமும், 1 கோடி ரூபாய்க்கு மேல் கடனில் சுமார் 1.20% முதல் 1.35% வரை கட்டனமாக வசூலிக்கப்படலாம். இதில் சிறப்பு பிரிவுகளுக்கு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த கட்டணமானது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஆக வங்கிகளிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications