MSME-க்கள் ஏன் கடன் வலிமையை அதிகரிக்க வேண்டும்? கடன் தகுதியை அதிகரிக்க முக்கிய வழிகள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) தங்கள் கடன் வலிமையை (Credit Strength) அதிகரிப்பது அதன் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஆகும். ஏனெனில் வலுவான கடன் வரலாறு தான், ஒரு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தொடர்ந்து கடன் வலிமையை அதிகரிப்பதால் பல்வேறு பலன்களைப் பெறுகின்றன. அவற்றில் முக்கியமான பலன்களை இப்பதிவில் பார்ப்போம்.

MSME-க்கள் ஏன் கடன் வலிமையை அதிகரிக்க வேண்டும்? கடன் தகுதியை அதிகரிக்க முக்கிய வழிகள்!

எளிதான கடன் ஒப்புதல்
பொதுவாக தனி மனிதர்களாக இருந்தாலும், நிறுவனங்களாக இருந்தாலும், வங்கிகள், நிதி நிறுவனங்கள் முதன் முதலில் பார்ப்பது அவர்களின் சிபில் ஸ்கோரை தான். அதை வைத்து அவர்களுக்கு கடன் கொடுக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்கின்றன.

உதாரணத்திற்கு உங்கள் கடன் வரலாறு சிறப்பாக இருந்தால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். ஏனெனில் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட ஒரு பொறுப்பான நிறுவனம் என்பதை ஏற்கனவே ஆரோக்கியமான சிபில் ஸ்கோர் மூலம் காட்டி விட்டீர்கள்.

இது நீங்கள் எப்படி முந்தைய காலத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியுள்ளீர்கள் என்பதை காட்டி விடும். இதனால் உங்களுக்கு கடன் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்கும். அதுவே சிபில் ஸ்கோர் குறைந்தவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலும், அதிக வட்டியில் தான் கிடைக்கும். வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை வட்டிக்கே செலுத்த வேண்டியிருக்கும்.

குறைந்த வட்டியில் கடன்?
கடன் கேட்கும் பலருக்கும் கடன் கிடைக்கலாம். ஆனால் அதில் எத்தனை பேருக்கு குறைந்த வட்டியில், கேட்ட நேரத்தில் கடன் கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி தான். ஏனெனில் கடன் வரலாறு வலிமையாக இருந்தால் தான், வங்கிகள் உங்களை குறைந்த ரிஸ்க் உள்ளவராக கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முன் வரலாம். இது கடனே வாங்கினாலும், மொத்த கடன் செலவில், செலவை கணிசமாகக் குறைக்க உதவும். இது லாபத்தில் அதிகரிப்பை காணவும் உதவிகரமாக இருக்கும்.

அதிக கடன் தொகை?
ஒருவருக்கு கடன் பெற அதிக தகுதி இருந்தாலும், சிறந்த கடன் வரலாறு இல்லை எனில், அவர்களுக்கு வங்கிகள் அதிக கடனை கொடுக்க யோசிக்கலாம். இதே கடன் வரலாறு சிறப்பாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கான கடன் தகுதியில் பெரும்பகுதியை வங்கிகளே தானாக முன் வந்து உங்களுக்கு பெரிய அளவிலான தொகையை கடன் கொடுக்க முன்வரலாம்.

இது நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கும். வணிக விரிவாக்கம், புதிய இயந்திரங்கள் வாங்குவது போன்ற பெரிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை பெற வழிவகுக்கலாம். அதோடு வாங்கிய கடனுக்காக கால அவகாசத்தையும் நீண்ட காலம் பெறவும் உதவும்.

சிறந்த வணிகப் பெயர்
ஒரு நிறுவனம் சிறப்பான கடன் வரலாற்றை கொண்டிருந்தால், அது சாதகமான கடன் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல, வலுவான வணிக உறவுகளையும் கட்டியெழுப்ப உதவும். ஒரு நிறுவனம் நிதி ரீதியாக சிறந்து விளங்கினாலே, சிறந்த சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என அனைத்தும் இதை சார்ந்தே அமைவார்கள். இது அவர்கள் மத்தியில் ஒரு பெரும் நம்பிக்கையை வளர்க்கும்.

மொத்தத்தில் ஒரு எம்.எஸ்,எம்.இ நிறுவனம் தனது கடன் வலிமையை அதிகரிப்பதன் மூலம், தேவைப்படும் போது சரியான நேரத்தில், குறைவான வட்டியில் கடன் பெற உதவும். அதன் மூலம் சந்தையில் தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொள்ளவும் உதவும். இது சங்கிலித் தொடராக, அதன் மொத்த செயல்பாடுகளிலும் சாதகமான போக்கை உருவாக்கும். ஆக ஒரு நிறுவனம் தனது கடன் வலிமையை அதிகரித்துக் கொள்வது மிக நல்லது. குறிப்பாக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு இது மிகவும் நல்லது.

கடன் வலிமையை எப்படி அதிகரிப்பது?
எம்.எஸ்.எம்.இ- க்கள் தங்கள் கடன் வலிமையை அதிகரிக்க, அவர்களின் சிபில் ஸ்கோரை சிறப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முக்கிய வழி வாங்கிய கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும். அது வணிக கடனாக இருந்தாலும், ஓவர் டிராஃப்ட் வசதி அல்லது கிரெடிட் கார்டு கடன் என எதுவாக இருந்தாலும், தவணை தேதியில் சரியாக செலுத்தி விட வேண்டும். மாறாக தவணையை தவறவிட்டால், சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படும். அதோடு கூடுதல் வட்டி மற்றும் அபராதங்களையும் செலுத்த வழிவகுக்கலாம்.

வங்கிகள் உங்களுக்கு கொடுக்கும் கடன் வரம்பில் குறிப்பிட்ட விகிதத்தை அல்லது குறைந்த விகிதத்தை முடிந்த அளவில் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு 1 கோடி ரூபாய் கடன் வரம்பு உள்ளது எனில், 70 - 80 லட்சம் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இது கடனே வாங்கினாலும், அதிகமாக கடனை சார்ந்திருக்கவில்லை என்பதை காட்டும். இது மறைமுகமாக உங்களுடைய சிறந்த நிதி நிர்வாகத்தைக் காட்டும்.

கடன் கிடைக்கிறது என்பதற்காக ஒரே வழியில் அதிக கடனை பெறக் கூடாது. அதாவது ஒருவரின் கடன் போர்ட்ஃபோலியோவில் பாதுகாப்பான கடன், பாதுகாப்பற்ற கடன் என கலந்து இருப்பது நல்லது. குறிப்பாக பாதுகாக்கப்பட்ட கடனில் அதிக கவனம் செலுத்துவது, உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

மேற்கண்ட காரணிகளுக்கு மத்தியில் அடிக்கடி வங்கிகளில் கடன் வேண்டி விண்ணப்பிப்பதும் தவறான ஒன்று. ஆக இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை கவனத்தில் கொண்டாலே, உங்கள் சிபில் ஸ்கோர் சிறப்பாக இருக்கும். நிறுவனங்களுக்கான கடன் வரலாறும் சிறப்பாக இருக்கும். இது எம்.எஸ்.எம்.இ -களின் வளர்ச்சிக்கும் உகந்த ஒன்றாக இருக்கும். கடன் வலிமையையும் அதிகரிக்க உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+