குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) ஊக்குவிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அப்படி வழங்கும் சலுகைகளில் தொழில் முனைவோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்கும் கிரெடிட் கார்டு கடன் திட்டம் பற்றி இப்பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
யாருக்கு ரூ.5 லட்சம் வரை கிரெடிட் கார்டு?
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் வரையிலான கிரெடிட் கார்டு திட்டத்தை, நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் கொண்டே இந்த கிரெடிட் கார்டு திட்டமானது அமலுக்கு வந்தது. இந்த கிரெடிட் கார்டை சிறு குறு நிறுவனங்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த, இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

நிபந்தனை என்ன?
மைக்ரோ எண்டர்பிரைஸ் கார்டு (ME -Card ) என்ற பெயரில் உள்ள இந்த கடன் அட்டையை, நீங்கள் எம்.எஸ்.எம்.இ ஆக இருந்தாலும், குறிப்பாக குறு நிறுவனமாக இருந்தால், இந்த அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. உங்கள் நிறுவனம் கட்டாயம் உதயம் (Udyam) போர்ட்டலில் பதிவு செய்து, சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்திருக்கும் நிறுவனம், குறு நிறுவனமாகவும் வகைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
2. உங்கள் வணிகத்திற்கான ஆலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்பட்ட முதலீடானது 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. ஒரு நிதியாண்டில் உங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல் 5 கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
4. குறிப்பாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்க வேண்டும்.
5. நீங்கள் செய்யும் தொழில் செயற்பாட்டில் இருக்க வேண்டும். அதன் வங்கி கணக்கு முறையாக இயங்க வேண்டும்.
6. பான் கார்டு மற்றும் ஜிஎஸ்டி பதிவும் அவசியம் இருக்க வேண்டும்.
வங்கிகள் பொதுவாக வழங்கும் பிசினஸ் கிரெடிட் கார்டுகளுக்கு இதுபோன்ற ஆவணங்கள் தேவையில்லை என்றாலும், மத்திய அரசின் எம்இ - கார்டு திட்டத்தின் மூலம் கார்டை பெற மேற்கண்ட ஆவணங்கள் அவசியம்.
எப்படி பெறுவது?
எஸ்பிஐ, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்த எம்.எஸ்.எம்.இ கார்டை வழங்கி வருகின்றன. இருப்பினும் உங்கள் தொழிலுக்கான வணிக கணக்கு உள்ள வங்கியை அணுகுவது எளிதாக எம் இ கார்டை பெற வழிவகுக்கும்.
இதற்காக வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில், உதயம் சான்றிதழ், வணிக உரிமையாளரின் ஆதார் மற்றும் பான் அட்டை, வணிக வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கைகள், ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். அப்படி இல்லையேல் ஆன்லனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த கடன் பாதுகாப்பற்ற கடனாக இருந்தாலும், அதற்கு கிரெடிட் குவாரண்டி இருப்பதால், எளிதாக கடன் பெற முடியும்.
எவ்வளவு கடன் வரம்பு?
எம்.எஸ்,.எம்.இ கிரெடிட் கார்டின் கடன் வரம்பானது 5 லட்சம் வரை என்றாலும், உங்களுடைய வணிகத்தின் விற்றுமுதல் மற்றும் தகுதியைப் பொறுத்து மாறுபடும். இந்த கடனுக்கு 45 - 50 நாட்கள் வரையில் வட்டி இல்லா காலம் அவகாசமாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆக இதன் மூலம் தினசரி செயல்பாட்டு செலவுகள் மற்றும் சரக்கு கொள்முதல் மற்றும் பிற வணிக செலவுகளுக்காகவும் வட்டி இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வட்டி இல்லாமல் தேவையான நேரத்தில் நிதி உதவியும் கிடைக்கும். வணிகமும் மேம்படும். எனினும் இதை சரியாக கையாளத் தெரிந்திருப்பது அவசியம். ஏனெனில் கிரெடிட் கார்டுகளை சரியான பயன்படுத்தியவர்களை விட, அதனால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications