இந்தியாவில் இன்றளவும் உற்பத்தி துறையானது ஓரளவுக்கேனும் வளர்ச்சி கண்டு வருகிறது எனில், அதற்கு முக்கிய காரணம் எம்எஸ்எம்இ எனும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான்.
இதன் மூலம் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். மேலும் நாட்டின் ஜிடிபி விகிததில் கணிசமான பங்கினை கொண்டுள்ளது. இதன் காரணமாக எம்எஸ்எம்இ-க்களுக்கு அரசு பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வந்தாலும், அது தற்போதுள்ள நிலையில் போதுமானதாக இல்லை.

கொரோனாவின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உலக வங்கியானது 750 மில்லியன் டாலர்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது நொடிந்து போன எம்எஸ்எம்இ-களுக்கு ஒரு ஊக்கத்தினை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொகுப்பானது தன்னம்பிக்கை இந்தியா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எம்எஸ்எம்இ தொகுப்பையும் ஆதரிக்கும்.
World Bank's MSME Emergency Response program திட்டத்தில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீளவும், மில்லியன் கணக்கான வேலைகளை பாதுக்காக்கவும் 1.5 மில்லியன் எம்எஸ்எம்இ-களூக்கு கடன் தேவை மற்றும் நிதித் தேவைகளை இது பூர்த்தி செய்யும் என்றும் பன்முக கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 30 சதவீத பங்கும் வகிக்கும் இந்தியா எம்எஸ்எம்இ துறையானது, தற்போது கொரோனாவினால் கடுமையான மன அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றது. சுமார் 150 - 180 மில்லியன் மக்கள் பணியாற்றும் இத்துறையில், ஆர்டர்கள் ரத்து, வாடிக்கையாளர்கள் இழப்பு, விநியோக சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.
இது இந்த துறையினரின் வருவாய் குறையவும் காரணமாக அமைந்துள்ளது. ஆக மேற்கண்ட இந்த அழுத்தத்தினால், வருவாயில் ஒரு அழுத்தத்தினை கண்டுள்ளது. இது பணப்புழக்க பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. இது இத்துறையினருக்கு மேலும் அழுத்ததினையே உருவாக்கும்.
இந்தியாவினை பொறுத்தவரையில் எம்எஸ்எம்இ துறையானது வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக இத்துறையினரின் முக்கிய தேவையே இத்துறையில் பணப்புழக்கத்தினை அதிகரிப்பது தான். ஆக உலக வங்கியின் இந்த அறிவிப்பானது நிச்சயம் இந்திய எம்எஸ்எம்இக்களுக்கு மிக உதவிகரமாக இருப்பதோடு, இத்துறையினரின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications