ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்த சியோமி, நாட்டில் இருக்கும் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 6,500 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
1 பில்லியன் டாலர்
சியோமி முடிவு செய்யதுள்ள 1பில்லியன் டாலர் முதலீட்டை மொபைல் ஆப்ஸ், இண்டர்நெட் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
100 நிறுவனங்கள்
சியோமி மற்றும் இதன் கிளை நிறுவனமான ஷுன்வே கேப்பிடல் ஆகியவை இணைந்து இந்தியாவில் ஏற்கனவே 6 இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிலையில் இதன் எண்ணிக்கையை 100 நிறுவனங்களாக உயர்த்த உள்ளது. இதில் ஹங்காமா மற்றும் கிரேசி பீ ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு
இந்த முதலீடு மொபைல் இண்டர்நெட் மற்றும் தொழில்நுட்பத்தில் சேவையை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையை மற்றும் அதன் பயன்பாட்டையும் விரிவுபடுத்தவும் முடியும் எனச் சியோமி நம்புகிறது.
300 நிறுவனங்கள்
சியோமி கடந்த 4 வருடத்தில் சீனாவில் சுமார் 300 நிறுவனங்கள் மத்தியில் சுமார் 4 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்துள்ளது. இதேபோன்ற முதலீட்டு முறையைத் தான் இந்தியாவில் சியோமி இயக்க உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
டெக் உலகில் தற்போது சியோமி முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது சியோமி, தற்போது உலக நாடுகளில் புதிய முதலீடுகளுக்காகவும், சேவை வரிவாக்கத்திற்காகவும் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications