குயிக் காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெப்டோ மும்பையின் போவாயில் இருந்து நாட்டின் டெக் தலைநகரான பெங்களூரின் சர்ஜாபூருக்கு தனது தலைமையகத்தை மாற்றுகிறது. ஜெப்டோவுக்கு ஏற்கெனவே ஒரு அலுவலகம் உள்ளது.
ஆனால் இப்போது நிறுவனத்தின் அனைத்து கார்ப்பொரேட் செயல்பாடுகளையும் பெங்களூருக்கு மாற்றுவதால் கூடுதல் இடவசதியுடன் செயல்பட உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஜெப்டோ அலுவலக செயல்பாடுகளும் இங்கிருந்து இனி செய்யப்படும்.

தொடங்கி மூன்று ஆண்டுகளான ஜெப்டோ மும்பையில் பல்வேறு துறைகளில் செயல்பட்டது. டெக் மற்றும் புராடக்ட் டீம்கள் பெங்களூரில் செயல்பட்டன. இப்போது அதன் 1800 ஊழியர்களையும் ஒரே அலுவலகத்தில் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்துக்குள் மும்பையிலிருந்து தலைமையகம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுவிடும்.
இதற்காக பெங்களூருக்கு இடம் மாறும் ஊழியர்களுக்கு மாறுதலுக்கான செலவுகளை ஜெப்டோ அளிக்கிறது. இதனால் நிறுவனத்துக்கு ரூ.4 கோடி செலவாகும்.
மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாறுவதால் ஜெப்டோவுக்கு மாதம் ரூ.50 லட்சம் வரை செலவு மிச்சமாகும் என்பதால் இடம் மாறும் ஊழியர்களுக்கு செலவு செய்யும் தொகையை சரி செய்து கொள்ளலாம் என்று நிர்வாகம் நினைக்கிறது.
தற்போது பெங்களூரில் 700-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மேலும் 400 பேரை பணியில் எடுத்துள்ள Zepto, அவர்களுக்கு பெங்களூருக்கு குடிபெயர வாய்ப்பு வழங்கியுள்ளது. இதில் எத்தனை பேர் மும்பையிலேயே தங்க விரும்புகிறார்கள் என்பதை நிறுவனம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
நிறுவனத்தின் இணை நிறுவனர் கைவல்யா வோரா பெங்களூரில் வசித்து வருவதால், தலைமையகம் பெங்களூருக்கு மாற்றப்படுகிறது. முன்னதாக, மற்றொரு இணை நிறுவனர் ஆதித் பாலிச்சா மும்பையில் இருந்தாலும், பெங்களூருக்கும் மும்பைக்கும் இடையே பயணித்து வந்தார்.
தற்போது மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பெங்களூருவில் மட்டும் பெரிய அளவிலான அலுவலகத்தை ஏற்படுத்த Zepto திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரில் உள்ள தற்போதைய அலுவலகத்திற்கு அருகில் புதிய இடத்தை தேடி வருகிறது.
இந்த மாற்றத்தால், நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1800 முதல் 2000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story Written by: jayachandran


Click it and Unblock the Notifications