இந்தியாவின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத் துறையில் முக்கியமான நிறுவனமான அல்ட்ரா வயலெட் ஆட்டோமோட்டிவ், சமீபத்தில் ரூ.130 கோடி ($15.3 மில்லியன்) நிதியை திரட்டியுள்ளது. இந்த நிதி திரட்டலை Zoho தலைமையிலான முதலீட்டாளர் குழுவின் மூலம் நடைபெற்றுள்ளது. லிங்கோட்டோ, முதல் பார்ட்னர்ஸ் மற்றும் ஓஜாஸ் கன்சல்டேஷன் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இந்த முதலீட்டை செய்துள்ளனர்.
இந்த 130 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 90 கோடி ரூபாயை ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ZOHO கார்ப்ரேஷன் முதலீடு செய்துள்ளது. ஸ்ரீதர் வேம்பு அடுத்தடுத்து பல துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் வேளையில், அல்ட்ரா வயலெட் ஆட்டோமோட்டிவ் அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் நாராயண சுப்ரமணியன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரால் நிறுவப்பட்ட பெங்களூரு தலைமையிடமாக கொண்ட அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ், எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இந்த புதிய நிதியுதவியுடன், அல்ட்ரா வயலட்டின் மொத்த நிதி திரட்டலின் மதிப்பு 75 மில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் பட்டியலில் Qualcomm மற்றும் TVS மோட்டார் கம்பனி போன்ற பெரிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
புதிதாகப் பெறப்பட்ட 130 கோடி ரூபாய் முதலீட்டை, தயாரிப்பு மேம்பாடு, இயக்க விரிவாக்கம் மற்றும் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிறுவனத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அல்ட்ரா வயலட் சமீபத்தில் பிரபலமான EICMA 2023 இல் அதன் முக்கிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள், F77 Mach 2 ஐ அறிமுகப்படுத்தியது. 10.3 kWh பேட்டரி பேக் மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த உயர் செயல்திறன் பைக், எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையை புரட்டிப் போட தயாராக உள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற முக்கிய ஐரோப்பிய சந்தைகளில் தனது சர்வதேச விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ளது. F77 Mach 2 மாடல் ஐரோப்பாவில் 9,000 யூரோ முதல் 11,000 யூரோ வரை விலை நிர்ணயிக்கப்படலாம், இது உள்ளூர் ஊக்குவிப்புகள் மற்றும் வரிகளைப் பொறுத்து மாறுபடும்.
அல்ட்ரா வயலட் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், போட்டி மிகுந்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் சவால்களை எதிர்கொள்கிறது. 2023-24 நிதியாண்டில், நிறுவனம் ரூ.15 கோடி இயக்க வருவாயில் ரூ.61.5 கோடி நிகர இழப்பை ஏற்படுத்தியது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications