சென்னை: நாட்டிற்கே முன்னோடியாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களும் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் வரை இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதுப்பிக்கப்பட்டதில் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியில் இருந்து 1.14 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் இருக்கும் பெண்களின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிவில் பதிவு அமைப்பில் இருக்கும் தரவுகள் மூலம் கண்காணிக்கிறார்களாம்.
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இவ்வாறு உயிரிழந்த பெண்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாம்.
அதிக வருமானம் இருப்பவர்கள் கண்டறியப்பட்டது, சொத்து, நிலம் வாங்கியது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தது ஆகிய காரணங்களால் தகுதியற்றவர்கள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சமூக பாதுகாப்பு பொறுப்பாளர் இவ்வாறு கலைஞர் உதவி தொகை திட்டத்தின் உதவி பெறும் பெண்களின் வங்கி கணக்கு, நிலப்பதிவு, வரி கணக்கு மற்றும் வாகன பதிவு ஆகியவற்றை சரி பார்க்கிறார்களாம்.
1000 ரூபாய் உரிமை தொகை சரியான நபருக்கு தான் சென்று சேர்கிறதா என்பதை சரி பார்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 1140 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளது, குடும்பத்தில் அரசு ஊழியர்கள் அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் உள்ளனர், குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் அல்லது வருமான வரி செலுத்துபவர் உள்ளனர், குடும்பத்தில் சொந்த பயன்பாட்டுக்கான நான்கு சக்கர வாகனம் உள்ளது என்றால் அந்த குடும்பங்களின் தலைவிகளுக்கு இந்த திட்டத்தில் பணம் கிடைக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications