நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான மும்பையின் பிரபல உணவகமான 'பாஸ்டியன்' (Bastian) தற்போது, பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, தாதரில் உள்ள கோஹினூர் ஸ்கொயர் கட்டிடத்தின் 48-வது தளத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இதன் இரண்டாவது கிளையான 'பாஸ்டியன் அட் தி டாப்' (Bastian At The Top), தற்போது மும்பையின் மிக ஆடம்பரமான உணவு மற்றும் இரவு நேர கேளிக்கை மையமாக திகழ்கிறது.
மிக உயரமான இந்த உணவகம், நகரின் 360 டிகிரி கண்கவர் காட்சிகளை விருந்தினர்களுக்கு வழங்குகிறது. இதன் சிறப்பம்சங்களாக உட்புற வடிவமைப்புகள், மொட்டை மாடி நீச்சல் குளம் மற்றும் ஆடம்பரத்தையும் உற்சாகத்தையும் கலந்து தரும் சூழலை கொண்டுள்ளது. வார நாட்களில், இது ஒரு உயர்தர உணவு அனுபவத்தை நாடும் மக்களுக்கு விருந்தாகவும், வார இறுதி நாட்களில், டி.ஜே.க்கள் இசையுடன் கூடிய பிரத்யேக இரவு விருந்து விடுதியாகவும் செயல்படுகிறது.

இத்தகைய வெற்றியின் பின்னணியில் உள்ள பிரமிக்க வைக்கும் வருமானம் குறித்து, பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஷோபா டே முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தாதர் கிளையான 'பாஸ்டியன் அட் தி டாப்' உணவகம் இரவு ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் ஈட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். வார நாட்களில் சுமார் ரூ.2 கோடியும், வார இறுதி மற்றும் முக்கியமான நாட்களில் ரூ.3 கோடியை தாண்டியும் வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த உணவகத்தில் சுமார் 1,400 பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வசதி உள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய இட வசதி இருந்தும், வெளியே காத்திருப்போர்களின் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இது மும்பையில் உள்ள பிரபலங்களின் மையமாக மாறியுள்ளது.
லம்போர்கினி மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் போன்ற ஆடம்பர கார்களில் வரும் வாடிக்கையாளர்கள், இங்கு உயர்ரக மதுபானங்கள் மற்றும் சுவையான உணவுகளை அருந்துகின்றனர். பல விருந்தினர்கள் ஒரே இரவில் லட்சக்கணக்கில் செலவழிப்பதாகவும், உயர்தர மதுபானங்களில் திளைப்பதாகவும் ஷோபா டே கூறியுள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் வணிகத் திறமை : இந்த உணவகம் ஷில்பா ஷெட்டிக்கும் உணவக உரிமையாளர் ரஞ்சித் பிந்த்ராவுக்கும் இடையேயான கூட்டு முயற்சியாகும். இந்த பிராண்டில் ஷில்பா ஷெட்டிக்கு 50 சதவீத பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அவர் இணைந்த பிறகு, 'பாஸ்டியன்' பிராண்ட் வேகமாக விரிவடைந்துள்ளது. சமீபத்தில் கோவாவிலும் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளதுடன், ஜூஹூவில் 'பாஸ்டியன் பீச் கிளப்' அமைப்பதற்கான திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது 'இந்தியாஸ் பெஸ்ட் டான்ஸர்' நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார். அவர் விரைவில் 'கே.டி: தி டெவில்' என்ற கன்னட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பிரேம் இயக்கும் இப்படத்தில் துருவா சர்ஜா, சஞ்சய் தத், வி. ரவிச்சந்திரன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications