ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மீண்டும் 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் கடனை ரைட் ஆப் செய்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் (FY 13 -14) - (FY21 - 22), எஸ்பிஐ 1,45,248 கோடி ரூபாய் மதிப்பிலான மோசமான கடனை ரைட் ஆப் செய்துள்ளது.
எனினும் இவர்களிடம் இருந்து 13% அதிகமான தொகையை வசூல் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
ரைட் ஆஃப்
இதில் 2013 - 14ம் ஆண்டில் 3,248 கோடி ரூபாய் கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில் வெறும் 12 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதே 2014 - 15ம் நிதியாண்டில் 5630 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.
2015 - 17 காலகட்டத்தில் எவ்வளவு?
2015 - 16ம் நிதியாண்டில் 8461 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை ரைட் ஆப் செய்துள்ளது. அதேசமயம் 261 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை அந்த காலகட்டத்தில் மீட்டுள்ளது.
இதே 2016 - 17ம் நிதியாண்டில் 13,587 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை ரைட் ஆப் செய்துள்ளது. எனினும் 308 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை இந்த காலகட்டத்தில் மீட்டுள்ளது.
2017-19ம் ஆண்டில் எவ்வளவு?
2017 - 18ம் நிதியாண்டில் 17,548 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை ரைட் ஆப் செய்துள்ளது. அதே காலகட்டத்தில் 815 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.
2018 - 19ம் நிதியாண்டில் 27,225 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2215 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.
2020 - 21ம் ஆண்டில் என்ன நிலவரம்?
2019 - 2020ல் 46,348 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 5,366 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.
2020 - 21ல் வெறும் 17,816 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 6,507 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் என்ன நிலவரம்?
2021 - 2022ம் ஆண்டில் 5385 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் செய்ப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 4176 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மீட்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் இந்த 9 ஆண்டுகளில் 1,45,248 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த 9 ஆண்டுகளில் மீட்பு என்பது 19,678 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக மணி லைஃப் தரவு சுட்டிக் காட்டுகின்றது.
லிஸ்டில் யாரெல்லாம்?
எஸ்பிஐ-ன் இந்த மோசமான கடன் பட்டியலில் 2020ல் மட்டும் அலோக் இண்டஸ்ட்ரீஸ், பூஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட், IRVCL லிமிடெட், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடங்கும். எனினும் மற்ற நிறுவனங்களின் பட்டியலை இவ்வங்கி வெளியிடவில்லை.
எஸ்பிஐ-ல் மட்டுமே இந்த அளவுக்கு எனில், மற்ற பொதுத்துறை வங்கிகளில் எவ்வளவு இருக்குமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications