2 வயசு குழந்தைக்கு ரூ.1.25 லட்சம் டொனேஷனா? பகல் கொள்ளையா இருக்கே…!! கதறும் தந்தை..!!

இந்தியாவில் கல்வி சார்ந்த செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றன. அதுவும் தனியார் பள்ளிகளில் கேட்கப்படும் பள்ளி கட்டணங்களை நம்மால் யூகித்து கூட பார்க்க முடிவதில்லை. அப்படி தன்னுடைய 2 வயது மகளை பள்ளியில் சேர்க்க சென்று பள்ளி கட்டணத்தையும் டொனேஷனையும் கேட்டு ஆடிப்போய் இருக்கிறார் இங்கே ஒரு தந்தை.

பிரீதேஷ் லக்கானி என்பவர் தொழில்முனைவோராக இருக்கிறார். இவர் தனுடைய எக்ஸ் பக்கத்தில் வெளீயிட்டுள்ள பதிவில், 2 வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க 1.25 லட்சம் டொனேஷனாக கேட்கிறார்கள் என அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளர். என்னுடைய மகளுக்கு 2 வயதாகிறது.மழலையர் பள்ளியில் (Preschool) சேர்ப்பது குறித்து நாங்கள் யோசித்தோம் பள்ளிகளில் சென்று விசாரிக்க தொடங்கினோம் என கூறியுள்ளார்.

2 வயசு குழந்தைக்கு ரூ.1.25 லட்சம் டொனேஷனா? பகல் கொள்ளையா இருக்கே…!! கதறும் தந்தை..!!

இங்கே ஒரு பள்ளியில் ஒரு பெற்றோருடன் உரையாடினேன் அப்போது இங்கே டொனேஷன் கட்டாயம் என்கின்றனர் இல்லை என்றால் உங்கள் குழந்தைக்கு தேர்வு நடத்தி அதில் வேண்டுமென்றே ஃபெயில் ஆக்கி அதிக கல்வி கட்டணம் கேட்பார்கள் என கூறினாராம். மேலும் டொனேஷன் மட்டுமே 1.25 லட்சம் கட்ட வேண்டுமென தெரிவித்தாராம்.

Also Read

மழலையர் பள்ளியில் சேர்ந்து படிப்பது கூட இவ்வளவு செலவுமிக்கதாக மாறிவிட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பலரும் எதிர்வினை யாற்றியுள்ளனர். சிலர் முதலில் இந்த பள்ளியை விட்டு வெளியேறுங்கள் இது போன்ற பள்ளிகளை புறக்கணித்தால் தான் திருந்துவார்கள் என கூறியுள்ளனர்.

சிலர் 2 வயது குழந்தைக்கு தேர்வா என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். ஒரு நபரோ எங்கள் ஊரில் 3 லட்சம் கேட்கிறார்கள் என கூறி அதிர்ச்சி தந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இது போன்ற மழலையர் பள்ளிகளில் இப்படி தான் பகல் கொள்ளை அடிக்கிறார்கள் என சாடியுள்ளனர்.

பெரும்பாலும் நகரங்களில் அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் குழந்தைகளை 2 வயதிலேயே டே கேர், மழலையர் பள்ளி போன்றவற்றில் விடுகின்றனர். இந்த தேவை அதிகமக இருப்பதால் சில பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள், சில பெற்றோர் வேறு வழியில்லாமல் கட்டணம் செலுத்துகின்றனர், சிலர் தவிர்த்துவிடுகின்றனர்.

Recommended For You

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த அடித்தளம் அமைத்து தர பெற்றோர் மழலையர் பள்ளிகள் மற்றும் ப்ரீ-ஸ்கூல்களுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இந்த கனவை சில நிறுவனங்கள் வியாபாரமாக மாற்றி இருப்பதாக பலரும் வேதனை படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+