சுபமுகூர்த்த காலம் வந்துவிட்டால் போதும் நாடே பரபரப்பாகிவிடும். கூட்டம் கூட்டமாகச் சென்று திருமணத்துக்குத் தேவையான நகைகள், ஆடைகள், பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். நல்ல வசதியான திருமண மண்டபவங்களை தேடித்தேடி அலைந்து புக் செய்வார்கள். மணமக்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
அப்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடிக்கும் மேலான திருமணங்கள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி பிஸியான திருமணக் காலங்களில் கேட்டரிங் சர்வீஸ், மலர் டெக்கரேட்டர்ஸ், இசைக் கச்சேரிக் குழு, பியூட்டீசியன் சர்வீஸ், கேப்கள் ஆகிய தொழிலுக்கு மிகப் பெரிய மவுசு இருக்கும்.

சராசரியாகப் பார்த்தால் இந்தியாவில் நாளொன்று 30,000 திருமணங்கள் என்றக் கணக்கில் ஆண்டுக்கு 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. அப்படிச் சொல்வது போல தினமும் திருமணங்கள் நடக்காது. குறிப்பிட்ட சுபமுகூர்த்த நாட்களில் மட்டுமே நடக்கும். குறிப்பாக மே, ஜூன், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மட்டும் 70 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன.
இதனால் அந்த நாட்களில் மேலே சொன்ன கேட்டரிங் போன்ற வகையறாவுக்கு ஆள் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். திருமணத்துக்குப் பல மாதங்களுக்கு முன்பே அதற்காக முன்பணம் தந்து புக் செய்து கொள்ள வேண்டும்.
இதில் குறிப்பிடும்படியான அம்சம் என்னவென்றால் மணப்பெண் அலங்காரம். திருமணம், ரிசப்ஷன் மட்டுமல்லாமல் இப்போதெல்லாம் பெரு நகரங்களில் மருதாணி போடும் சடங்கும் நடைபெறுகிறது. இதனால் பியூட்டீஷியன் தேவை மிக அதிகளவில் இருக்கிறது. ஆனால் அந்தளவுக்கு பியூட்டீஷியன்கள் ஒரேநாளில் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் பியூட்டீஷியன் தட்டுப்பாட்டை உணர்ந்து லாக்மே அகாதமியின் ஆப்டெக் மணப்பெண் அலங்கார பயிற்சிகளை சிறப்பாக அளித்து புதிதுபுதிதாக பியூட்டீஷன்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் சிறந்த மணப்பெண் அலங்கார நிபுணர்கள் உருவாகின்றனர்.
மணப்பெண் அலங்காரம் என்றால் மேக்அப்பில் தொடங்கி, டிசைன் கூந்தல் பின்னல், விரல் நக ஆர்ட், பேஷன் ஸ்டைலிங், சேலை டிரேப்பிங் போன்ற பல்வேறு திறன்கள் அடங்கியுள்ளன.
லாக்மே அகாதமயில் பயிற்சி பெற்றவர்கள் இதில் மிகவும் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். மணப்பெண்ணின் உடல்வாகு, நிறம், உயரத்தைப் பொறுத்து பேஷன் ஸ்டைலிங்குகளை செய்கின்றனர். இதனால் இவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல் திருமணத்தில் நிகழும் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி என்றால் அது ஃபோட்டோ ஷூட். மணமக்களால் மறக்க முடியாத தங்களது திருமண வைபவத்தை காலத்தால் அழியாத பொக்கிஷமாக போட்டோக்களாகவும், விடியோக்களாகவும் எடுத்துத் தருகின்றனர். இதற்காக அதி நவீன கிரேன்கள், கேமிராக்கள், மிக்ஸர்கள் போன்ற உபகரணங்களப் பயன்படுத்தி சிறப்பான ஆல்பத்தையும் விசிடிகளையும் தயாரித்துத் தருகின்றனர்.
இந்த போட்டோ ஷூட்டுக்கு முக்கியம் மணமக்களின் மேக்அப். இதில் லாக்மே அகாடமியில் கடும் பயற்சி பெற்ற நிபுணர்கள் சிறப்பாக பேர் வாங்கிச் செல்கின்றனர். லாக்மே அகாதமியின் பிரைடல் எக்ஸ்பர்ட் கோர்ஸில் சேர்வதற்கு இன்ஸ்டாகிராமில் உள்ள @lakmeacademy_aptech ஹேண்டிலை பார்த்துப் பயன் பெறலாம். அதில் இடம்பெற்றுள்ள ரீல்களைப் பார்த்தாலே நிபுணர்களின் தொழில்திறமையைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த பிரைடல் எக்ஸ்பர்ட் கோர்ஸை படித்து முடித்தால் நீங்களும் சிறந்த பியூட்டீஷியனாக ஆகலாம். ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்டின் 100 சதவீத துணை நிறுவனமான ஆப்டெக் லாக்மே லிவர் பிரைவேட் லிமிடெட்டின் லாக்மே அகாதமி ஆகும். 2015 ஆம் ஆண்டில் லாக்மே லிவர் ஆப்டெக் லிமிடெட்டுடன் சேர்ந்து இந்த புதிய முயற்சியைத் தொடங்கியது. இந்தியாவில் பியூட்டீஷியன் ஆக விரும்புவோருக்க பயிற்சி தருவதற்காக பியூட்டி அகாதமிகளை உருவாக்க இந்த நிறுவனம் உதவுகிறது.
நாட்டின் முதல் லாக்மே சலூன் செயின் பார்லர்களை உருவாக்கி ஹேர்ஸ்டைலிங், சருமம் மற்றும் அழகு சேவைகளை லாகேமே லிவர் அளித்து வருகிறது. இந்திய மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு 140 நகரங்களில் கிளை பரப்பியுள்ளது. இந்தக் கால பெண்களின் அழகுத் தேவைகளுக்கேற்ப லாக்மே சலூன்கள் இயங்கி வருகின்றன.
இதுவரை 5000க்கும் மேற்பட்ட பியூட்டீஷன்களை லாக்மே லிவர் உருவாக்கியுள்ளது. விதவிதமான ஹேர்ஸ்டைலிங்கில் எக்ஸ்பர்ட்களை உருவாக்கியது. நாடு முழுவதும் லாக்மே லிவருடன் 150க்கும் மேற்பட்ட பிரான்சைஸ்கள் இணைந்து செயல்படுகின்றன.


Click it and Unblock the Notifications