கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது மிக மோசமாக அதிகரித்துள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதும் வரையிலும் கூட ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது, மிக கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகின்றது.
தொடர்ந்து டிஜிட்டல் துறையில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், பணியமர்த்தலும் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து ஐடி துறையில் ஒரு புறம் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அட்ரிஷன் விகிதமும் அதிகரித்து வருகின்றது.
அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கும்
இந்த அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள, ஐடி நிறுவனங்கள் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்தாலும், நாளுக்கு நாள் இந்த விகிதமானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. UnearthInsight, அறிக்கையின் படி, இந்த மோசமான அட்ரிஷன் விகிதமானது, அடுத்த நிதியாண்டின் இரண்டாம் பாதியிலும் தொடரலாம் என கூறியுள்ளது.
5ல் ஒருவர் வெளியேறலாம்
UnearthInsight, அறிக்கையின் படி, 2022ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அட்ரிஷன் விகிதம் 17 - 19% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து ஊழியர்களில் ஒருவர் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம். கடந்த 6 மாதங்களில் இந்த விகிதமானது 30% வரையில் இருந்தது கவனிக்கதக்க விஷயம்.
காக்னிசண்டில் மோசம்
கடந்த செப்டம்பர் காலாண்டில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது, மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது 33% அதிகரித்துள்ளதாக தெரிவிட்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது 20% ஆக உயர்ந்துள்ளது.
இதே ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் அட்ரிஷன் விகிதமானது 15.7% ஆக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் போக்கு
எனினும் இதில் சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம், நாட்டின் முதல் ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின், அட்ரிஷன் விகிதமானது 15.7% ஆக உள்ளது. இது மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது குறைவாக தோன்றினாலும், முதல் காலாண்டில் 8.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக குறைவாக இருந்தாலும் அட்ரிஷன் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருவதை இதில் காண முடிகிறது.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

TCS அலுவலக மதமாற்ற சர்ச்சை: யார் அந்த ’Lady Captain’? பெண்களே அலுவலக நட்பில் எச்சரிக்கை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?



Click it and Unblock the Notifications