பெங்களூரு: இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் பெங்களூரு முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் , சிலிக்கான் வேலி என புகழ்பெற்றது பெங்களூரு நகரம். நாள்தோறும் இங்கே வேலை மார்க்கமாக ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள் .
பெங்களூருவில் ரியல் எஸ்டேட், வீட்டு வாடகை உள்ளிட்டவற்றின் மதிப்பு சற்றே அதிகம் தான் .வாழ்க்கை செலவினங்களும் மற்ற நகரங்களோடு ஒப்பிடும்போது பெங்களூருவில் அதிகமாக தான் இருக்கிறது. குறிப்பாக வாங்கக்கூடிய சம்பளத்தில் பெரும்பான்மையான தொகை வீட்டு வாடகைக்கு சென்று விடும் என பலரும் சமூக வலைத்தளங்களில் குமுறுவதை பார்க்க முடிகிறது .

இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே எழுப்பி இருக்கிறது. ஷரத்தா சைனி என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு வீடியோவில் அண்மையில் தான் பெங்களூருக்கு இடம்பெயர்ந்ததாகவும் தனியாக பெங்களூரில் வசிக்கக்கூடிய தனக்கு ஒரு மாதத்தில் எவ்வளவு செலவாகிறது என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .
யாராவது என்னுடைய நிதியை மேலாண்மை செய்ய வழிகாட்டுங்கள் என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்க வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஒரு மாதத்திற்கு இவர் வாடகை, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் , பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக மட்டும் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார். இது தவிர தினமும் வேலைக்கு சென்று வருவதற்கு போக்குவரத்திற்காக மாதம் ஆயிரம் ரூபாய் ஒதுக்குகிறாராம்.

வார இறுதி நாட்களில் வெளியில் அவுட்டிங் போவது ஷாப்பிங் செல்வது , நண்பர்களை சந்திப்பது என 5000 ரூபாயை செலவு செய்கிறாராம் . ஹோட்டலில் உணவு உண்பதற்கு , உணவு ஆர்டர் செய்வதற்கும் 6000 ரூபாயை செலவிடுகிறார் . பல்வேறு சப்ஸ்கிரிப்சன்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஒதுக்கீடு செய்கிறார் .
துணிமணி வாங்குவது, மேக்கப் பொருட்கள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயை செலவிடுகிறார் இஎம்ஐ தொகையாக 18,000 செலுத்துகிறார். மொத்தமாக ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை நான் செலவிடுகிறேன் என கூறும் அவர் என்னால் என்னுடைய வருமானத்தில் பணத்தை சேமிக்கவே முடியவில்லை எனக் கூறியிருக்கிறார் . என்னுடைய செலவினங்களுக்கே வருமானம் சரியாக இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் .
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பெங்களூருவில் தனியாக ஒரு நபர் வசிப்பதற்கு மாதம் ஒரு லட்சம் தேவைப்படுகிறது என பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். சிலர் எங்களுக்கும் இதே நிலைமைதான் என கூறியிருக்கின்றனர். ஒரு நபர் தான் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் தான் செலவிடுவதாகவும் இதற்கெல்லாம் தான் பணத்தை செலவிடுகிறேன் என்பது குறித்தும் பதிவு செய்திருக்கிறார் . தேவையற்ற செலவு எது என கண்காணித்து அவற்றை நீக்கி விட்டால் தானாக உங்கள் கைகளில் பணம் வந்துவிடும் என பலரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications