இந்தியா 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி பயணித்து வரும் வேளையில் இந்தியாவின் எட்டு மாநிலங்கள் ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான GDP மதிப்பைக் கொண்டிருக்கும் என இந்திய ரேட்டிங்க்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் (Ind-Ra) திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இந்தியாவின் 28 மாநிலங்களில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்கள் முதலில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்றும், இது 2039ம் நிதியாண்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய ரேட்டிங்க்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலமாக மகாராஷ்டிரா முதலில் 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டும் என்று, இம்மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து இந்த இலக்கை எட்டும். இதற்கு மாறாக, உத்தரப்பிரதேசம் 2042ம் ஆண்டில் தான் 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ரேட்டிங்க்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா 2028ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு 2030ம் ஆண்டிலும், கர்நாடகா 2032ம் ஆண்டிலும் இலக்கை எட்ட இலக்கு வைத்துள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் இந்த அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை மாநிலங்கள் எட்டாமல் போகலாம் எனவும் இந்திய ரேட்டிங்க்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா 2028ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு வைத்துள்ளது. ஆனால் தற்போதைய வளர்ச்சி அளவின் அடிப்படையில் 2028ம் ஆண்டிற்குள் மூன்று மாநிலங்கள் மட்டுமே 2028ம் ஆண்டில் 0.5 டிரில்லியன் டாலர் மதிப்பை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்குத் தேவையான தனிநபர் வருமான அளவை இந்திய மாநிலங்கள் எட்ட அதிக காலம் தேவைப்படலாம். பெரும்பாலான இந்திய மாநிலங்கள் 1,086 டாலர் முதல் 4,255 டாலர் வரையிலான தனிநபர் வருமானத்தைக் கொண்டிருப்பதால், அவை கீழ்-நடுத்தர வருமான (lower middle-income) பிரிவைச் சார்ந்தவையாக உள்ளது.
"உலக வங்கியின் 2023ம் ஆண்டிற்கான வருமான விளக்கத்தின் அடிப்படையில், கோவா மற்றும் சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மேல்-நடுத்தர வருமான (upper middle-income) பிரிவைச் சார்ந்தவையாக உள்ளது. upper middle-income தகுதி பெற ஒரு மாநிலத்தின் தனிநபர் வருமானம் 4,256-13,205 டாலராக இருக்க வேண்டும்.
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் குறைந்த வருமான பிரிவைச் சார்ந்தவை (தனிநபர் வருமானம் 1,085 டாலருக்கும் குறைவு) என்று இந்திய மதிப்பீட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Ind-Ra) தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications