தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு அனைத்தும் முந்தைய ஆட்சிக்காலக்கட்டத்தில் டீசென்டரலைஸ்டு செய்யப்பட்ட நிலையில், சென்னை தாண்டி தென் மாவட்டங்களிலும் முதலீடுகள் அதிகரித்தது. இதில் தூத்துக்குடி வேகமாக வளர்ந்து வரும் முக்கிய தொழிற்துறை பகுதியாக மாறி வருகிறது.
தூத்துக்குடியில் துறைமுகம் இருக்கும் காரணத்தால் ஏற்றுமதி சார்ந்த பல நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு முதலீடு செய்துள்ளது.

உதாரணமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் வின்பாஸ்ட், கப்பல் கட்டுமானத்துறையில் ஹெச்டி ஹூண்டாய், கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி Sembcorp, இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் வான்வழி, சாலை, ரயில் மற்றும் கடல்வழி என நான்கு வகையான போக்குவரத்து இணைப்புகளையும் கொண்ட முக்கிய தொழிற்துறை நகரம் தூத்துக்குடி மட்டுமே என்பதால் தவெக அரசும் இப்பகுதியில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 புதிய தொழிற்பூங்காக்களைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது.
முடிவைத்தானேந்தலில் சிப்காட் தொழிற்பூங்கா ரெடியாகி வருகிறது, சுமார் 2570 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த புதிய தொழிற்பூங்கா மூலம் சுமார் ரூ.5000 கோடி முதலீட்டை ஈர்க்க தவெக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் சில்லாநத்தத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் அதன் உதிரி பாகங்கள், பேட்டரி தயாரிப்பு, அசம்பிளி யூனிட், என EV துறை சார்ந்த உற்பத்தி எகோசிஸ்டத்தை உருவாக்கத் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாபெரும் EV பார்க் திட்டத்தின் மூலம் சுமார் ரூ7,000 கோடி முதலீட்டையும், சுமார் 10,000 வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தொழிற்பூங்கா-விற்கான அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது மட்டும் அல்லாமல் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டானில் தொழிற்துறை நிறுவனங்கள் விரைவாகச் செயல்பாடுகளைத் தொடங்க உதவும் வகையில், சுமார் ரூ.224 கோடியில் பிளக்-அண்ட்-பிளே (Plug-and-Play) வசதிகளை ஏற்படுத்த தவெக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 4 முக்கிய திட்டங்கள் மூலம் தென் மாவட்டங்களாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் புதிய முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications