ரூ.10,000 முதலீட்டை 37 லட்சமாக மாற்றிய ஃபண்டு பற்றி தெரியுமா?

சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகள் லாபம் ஈட்ட ஒரு சிறந்த வழியாக இருந்தாலும், எந்த ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். அப்போதுதான் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல லாபம் பெற முடியும். அதனடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு சுமார் 19.65% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை அளித்த ஒரு அருமையான ஃபண்டின் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெளிநாட்டு பங்குகளில் (Overseas Stocks) முதலீடு செய்ய விரும்பும் இந்திய முதலீட்டாளர்களுக்கு உதவும் ஒரு சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தான் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Parag Parikh Flexi Cap Fund). இந்த ஃபண்ட் 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்டின் கீழ் உள்ள மொத்த சொத்து மதிப்பு (AUM) ரூ. 63,933.76 கோடியாக உள்ளது. மேலும், நிஃப்டி 500 மற்றும் நிஃப்டி 50 போன்ற வழக்கமான தேர்வுகளை விஞ்சி, 2013 ஆம் ஆண்டு முதல் 19.65% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) வழங்கியுள்ளது. PPFCF ஃபண்டில், மாதாந்திர SIP முதலீடும், ஃபண்டின் தொடக்கம் முதலே 19.88 % வருமானத்தை அளித்துள்ளது.

ரூ.10,000 முதலீட்டை 37 லட்சமாக மாற்றிய ஃபண்டு பற்றி தெரியுமா?

PPFCF ஃபண்டு மே 24ஆம் தேதி, 2013ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்டது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 30, 2024 நிலவரப்படி, ரூ. 10,000 SIP முதலீடு செய்தவர்கள் தற்போது ரூ. 34.19 லட்சம் லாபம் பெற்றிருப்பார்கள். இந்த ஃபண்டில் SIP முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ. 1,000 ரூபாய், காலாண்டுக்கு ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் ரூ. 3,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் SIP ரிட்டர்ன்ஸ் கால்குலேஷன்:

முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை: ரூ. 12,10,000

முதலீட்டின் சந்தை மதிப்பு: ரூ. 34,19,737

ஏப்ரல் 30, 2024 நிலவரப்படி, பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், 1 வருட வருமானமாக 36.06 % அளித்துள்ளது. மே 24, 2013ஆம் ஆண்டு முதல், PPFCF திட்டம் 19.65% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) வழங்கியுள்ளது. PPFCF-இன் கடந்த 10 ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 19.18 % ஆகும்.

பாராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டம், முன்னர் 5 வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்த பங்குகளை கொண்டிருந்தது, தற்போது 4 வெளிநாட்டு பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. மொத்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களில் (AUM) 14.13% வெளிநாட்டு பங்குகளால் ஆனது. ஏப்ரல் 2024 நிலவரப்படி, அமேசான் (3.11%), மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (3.72%), ஆல்பாபெட் (3.98%), மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்கள் (3.32%) போன்ற வெளிநாட்டு பங்குகளைக் கொண்டுள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+