இந்தியா போன்ற ஒரு நாட்டில் மிடில் கிளாஸ் குடும்பமாக இருப்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த வேண்டும், குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை தர வேண்டும், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக செலவிட வேண்டும் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தான் இந்தியாவில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் தங்களது குடும்பங்களை வெற்றிகரமாக நடத்துகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் இவர்களிடம் இருக்கக்கூடிய முக்கியமான 10 பழக்க வழக்கங்கள். அவை என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

1. சிக்கனம்: இந்திய நடுத்தர குடும்பங்களை பொருத்தவரை சிக்கனமாக வாழ்வதற்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள். அதாவது தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது மற்றும் பணத்தை சேமிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள். இதன் மூலம் பணத்தின் மதிப்பு நமக்கு கற்பிக்கப்படுகிறது.
2. கல்விக்கு முக்கியத்துவம்: இந்திய நடுத்தர குடும்பங்களில் கல்வி மிகவும் மதிக்கப்படுகிறது. கல்வியில் முதலீடு செய்வது சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் கல்விக்காக எவ்வளவு தொகைய வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். குறிப்பாக பெற்றோர் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை கைவிட்டு குழந்தைகளின் கல்விக்காக சேமித்து வைப்பார்கள், குழந்தைகளும் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
3. சேமிப்பு மற்றும் முதலீடுகள்: இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை பரஸ்பர நிதிகள், நிலையான வைப்பு தொகைகள் மற்றும் தங்கம் மற்றும் சொத்து சார்ந்த முதலீடுகள் விருப்பமான முதலீடு மற்றும் சேமிப்பு பழக்கவழக்கங்களாக இருக்கின்றன.
4. பட்ஜெட் போடுவது : பட்ஜெட் போடாத இந்திய நடுத்தர குடும்பமே இருக்க முடியாது. ஏனெனில் இவர்களின் சிறந்த நிதி பழக்கங்களுக்கு முக்கிய காரணம் நிதி திட்டமிடல் .அதாவது தங்களுடைய வருமானம் என்ன, தங்களுடைய செலவினங்கள் என்ன, அதில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பன உள்ளிட்டவற்றை இவர்கள் முறையாக பட்ஜெட் போட்டு தான் முடிவு செய்வார்கள்.
5. தொழில் முனைவோர் : இந்திய நடுத்தர வருட குடும்பங்கள் தங்களுடைய வருமானங்களை அதிகரிப்பதற்கும் , நிதி சுதந்திரத்தை அறிவதற்கு அடைவதற்கும் ஒரு சிறந்த வழியாக தொழில்முனைவை கருதுகின்றனர். எனவே இவர்கள் பெரும்பாலும் சுய தொழில்களில் ஈடுபடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
6. கடன் வாங்குவதில் எச்சரிக்கை: கடன் வாங்குவது என்பது சில நேரங்களில் அவசியமானதாக மாறிவிடுகிறது. கல்விக் கடன் அல்லது வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றை இதில் நாம் குறிப்பிடலாம். இந்திய குடும்பங்கள் கடன்களை பொதுவாக எச்சரிக்கையுடனே அணுகுவார்கள். முடிந்தவரை தங்களிடம் இருக்கும் சேமிப்புகளை வைத்து அதனை ஈடுகட்ட முடியுமா என பார்ப்பார்கள் முடியாத பட்சத்தில் தான் கடன் வாங்கும் முடிவுக்கு வருவார்கள்.
7. குடும்ப ஆதரவு அமைப்பு: இந்திய நடுத்தர குடும்பங்களின் மிகப்பெரிய பலம் நமது குடும்ப அமைப்பு தான். ஏனெனில் இங்கே ஒரு குடும்ப அமைப்பாக ஒருவரது நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு மற்றொருவர் உதவியாக இருப்பார். இது மனிதர்கள் ஒரு குடும்பமாக வாழ வேண்டுவதன் முக்கியத்துவத்தையும் சவாலான காலங்களில் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.
8. நிதி சார்ந்த ஒழுக்கம்: இந்திய நடுத்தர குடும்பங்கள் வழக்கமான சேமிப்பு ,தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது மற்றும் பட்ஜெட் போட்டு அதன் அடிப்படையில் மட்டும் செலவுகளை செய்வது என்பன உள்ளிட்ட நிதி ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவே சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கும் சிறந்த பண நிதி மேலாண்மை பழக்கம் வந்துவிடுகிறது.
9. நீண்ட கால திட்டமிடல்: எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தை சேமித்து வைப்பது, ஓய்வு காலம், குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்குவதற்காக சேமிப்பது என முன்கூட்டியே எதிர்கால செலவுகளையும் இவர்கள் கணித்து சேமிக்கிறார்கள்.
10. பின்னடைவுகளை ஏற்றுக்கொள்ளுதல் இந்திய குடும்பங்கள் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டவை குறிப்பாக நிதி ரீதியான பின்னடைவுகள் இருந்து மீண்டு வரக்கூடிய தன்மை கொண்டவை தான் இந்திய நடுத்தர குடும்பங்கள் இது பின்னாலில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பொருளாதார ஏற்ற தாழ்வுகளை மிகச்சிறந்த முறையில் கையாள்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு மிகச் சிறந்த திறமை ஆகும்.
story written by: Devika
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications