முதல் மற்றும் முக்கியமான வழி என்னவென்றால் பட்ஜெட். பட்ஜெட் செய்வதுதான் உங்கள் வாழ்க்கை முழுவதும் எவ்வளவு சம்பாதிக்கிறோம் செலவழிக்கிறோம் என்பதை கணக்கிடும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை முதலில் கணக்கிடுங்கள்.
உங்களது சம்பளத்தை செலவிடுவதற்கு முன்பாகவே பலசரக்கு, வாடகை, மின்சார கட்டணம், கடன் தவணைகள், இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற முக்கியத் தேவைகளுக்கான பணத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள்.
ஒரு பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்வதன் மூலமாக உங்களது செலவு இலக்குகளை நிர்ணயித்து தேவையின்றி செலவு செய்வதை தவிர்க்கலாம். உங்களது நிதி எதிர்காலத்தை முடிவு செய்து குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை அடையுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு சீக்கிரம் சேமிப்பை தொடங்குகிறீர்களோ அந்தளவுக்கு உங்களது எதிர்காலத்துக்குப் பாதுகாப்பானது. இதனால் உங்களது செல்வத்தைப் பெருக்குவதற்கு நிறைய காலம் கிடைக்கும். அத்துடன் மிகப் பெரிய தொகையை எட்டலாம்.
கடன் வாங்குவதை முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கடனுக்கு செலுத்தும் வட்டியானது உங்களது செல்வத்தை தின்று விடும். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சில நேரங்களில் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். ஆனால் அதை தள்ளிப்போட்டால் கையில் பணம் வரும்போது இஷ்டம் போல வாங்கி அனுபவிக்கலாம். இதனால் உங்களது பணம் பாதிக்கப்படாது. அத்துடன் கடன் வாங்கினால் அது உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு சேமியுங்கள். இதனால் சேமிக்கும் தொகை பாதுகாப்பாக அதிகரிக்கும்.
கஷ்டமான நேரங்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எதிர்பாராமல் நிகழும் நிதிப் பிரச்னைகளுக்காக எப்போதும் சிறிது பணத்தை ஒதுக்கி வையுங்கள். மருத்துவம், விபத்து, வேலை இழப்பு போன்ற சமயங்களில் இந்தப் பணம் நிச்சயமாக கை கொடுக்கும்.
அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்துக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். சொந்த வீடு என்பது அத்தியாவசியம். கார் வாங்குவது ஆடம்பரம். ஆடம்பரச் செலவுகள் உங்களது சேமிப்பைக் கரைத்து விடும்.
ஓய்வுக் காலத்துக்காக தனியாகச் சேமியுங்கள். அப்போதுதான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் உங்களால் மீதக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் உங்களது இந்தத் தொகை நிச்சயம் கை கொடுக்கும்.
செல்வத்தை சேர்ப்பதற்கு நிதி மேலாண்மை திறன் அவசியம். அதைச் சரியாகச் செய்தால், அது உங்கள் மூலதனத்தை அதிகரிக்கவும், உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும். சேமிப்பு மற்றும் சொத்துக்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தி உங்கள் குடும்பத்துக்கு வழங்கலாம்.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் அனுபவிக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க இந்த அறிவைப் பயன்படுத்தலாம். துரதிர்ஷ்டவசமாக, தங்கள் பணத்தை சரியாக நிர்வகிக்காதவர்கள் பெரும்பாலும் கடனில் வீழந்து கஷ்டப்படுகின்றனர்.
இருந்தாலும் பட்ஜெட்டைப் பின்பற்றுபவர்களுக்கு நிதி சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பட்ஜெட் உங்கள் நிதிகளின் சரியான மேலாண்மை இலக்குகளை நிர்ணயிக்கவும், பின்தொடர வேண்டியவைகளைப் புரிந்துகொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications