மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ஆம் தேதி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் , சாமானிய மக்களும் தங்களின் ஓய்வு காலத்திற்கு தேவையான சேமிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்பது முதல் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
1. பழைய வரி நடைமுறையில் பிரிவு 80c இன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.5 லட்சம் உயர்த்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைக்கின்றனர் இந்த 2.5 லட்சத்தில் 1 லட்சம் ரூபாயை தனி பிரிவாக ஓய்வு காலத்திற்கு தேவையான முதலீடுகளான என்பிஎஸ் போன்ற திட்டங்களில் செய்யும் முதலீடுகளுக்கான விலக்கு என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

2. மூத்த குடிமக்கள் சேமிப்பு ஊக்கமளிப்பு திட்டம் என்ற தனி திட்டத்தை அரசு அறிமுகம் செய்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் கூடுதலாக 1% வட்டி வழங்க வேண்டும்.
3. இளைஞர் ஓய்வுகால நன்மை என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் நீண்ட கால நோக்கில் செய்யும் முதலீடுகளுக்கு 25,000 ரூபாய் வரை வரி விலக்கு வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
4. அமெரிக்காவில் கிடைக்கும் திட்டத்தை மாதிரியாக கொண்டு ஓய்வுகால சேமிப்பு கிரெடிட் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறும் நிதி ஆலோசகர்கள், குறைந்த வருமானம் இருந்தாலும் ஓய்வு காலத்திற்கான திட்டங்களில் சேமிக்கும் நபர்களுக்கு கூடுதலாக 10,000 ரூபாய் வரி சேமிப்பு வழங்கலாம் என்கின்றனர்.
5. தேசிய சேமிப்பு திட்டத்தில் முதிர்வின் போது வரி இல்லாமல் பணத்தை திரும்ப பெறும் வரம்பை 60% முதல் 80% ஆக உயர்ந்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
6. ஓய்வுகால சேமிப்புக்காக பணவீக்கம் அடிப்படையிலான பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
7. ஓய்வுகால நிதியை நோக்கமாக சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க 1 லட்சம் ரூபாய் வரை வரி இல்லாத வட்டி கொடுப்பனவுகளை மூத்த குடிமக்கள் பெற்று கொள்ளலாம் என்ற வகையில் பிரிவு 80TTB ஐ கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8. ஒரே ஓய்வுகால கணக்கு என்பதை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனையையும் சிலர் வழங்கியுள்ளனர். அதாவது இந்த திட்டங்களில் வரி விலக்கினை 3 லட்சமாக உயர்த்தினால் பெரும்பாலானவர்கள் ஓய்வு காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.
9. பெண் முதலீட்டாளர்களும் சமமாக ஓய்வுகால திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க அரசு புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
10. குறைந்த வருமானம் கொண்டவர்கள் ஓய்வு காலத்திற்காக மாதம் 5,000 முதலீடு செய்தால் அதற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்குவது என்பன போன்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
story written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications