தீபாவளி பண்டிகையின் போது குறைந்த முதலீட்டில் பெரிய லாபத்தை தரும் 10 பிஸ்னஸ் ஐடியா..!!

தீபத்திருநாளான தீபாவளி இந்தியா முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் வியாபாரிகளுக்கும் தீபாவளி முக்கியமான பண்டிகையாகும்.

புதியதொரு தொழிலை தொடங்குவதற்கு இந்நன்னாளில் மக்கள் பூஜை புனஸ்காரங்களுடன் முதலீடுகளை செய்வார்கள்.

தீபாவளி பண்டிகையின் போது குறைந்த முதலீட்டில் பெரிய லாபத்தை தரும் 10 பிஸ்னஸ் ஐடியா..!!

தீபாவளி பண்டிகை தங்களது வாழ்க்கையில் ஏற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரக் கூடிய நிகழ்வாக எல்லாரும் நினைக்கின்றனர், நம்புகின்றனர். இந்தப் பண்டிகைக் காலத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க வைக்கும் 10 தொழில் ஐடியாக்கள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

இந்தத் தொழில்களுக்கு எப்போதும் மார்க்கெட் இருக்காமல் போகலாம். இருப்பினும் இந்த தொழில்களை தீபாவளி காலத்தில் மிகவும் லாபகரமாக நடத்தலாம். பெரியதொரு பண முதலீடு இல்லாமலே நிறைய லாபத்தைக் குவித்து விடலாம்.

1. தீபாவளி ஷாப்பிங் : தீபாவளி கொண்டாட்டம் என்றாலே தங்கள் மனம் விரும்பியவர்களுக்குத் தேவையான பொருட்களை பரிசாக வாங்கித் தருவதாகும். சிறியதொரு தற்காலிக கடையை அமைத்து தீபாவளி பரிசுப் பொருட்களை விற்கலாம். இனிப்புகள், பலகாரங்கள் போன்றவற்றை அடுக்கி விற்கலாம். இதன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் அதன்மூலம் நீங்களும் லாபத்தை சம்பாதிக்க முடியும்.

2. பாத்திரங்கள் : தீபாவளியை ஒட்டி வரும் தாந்தேராஸ் சடங்குக்குத் தேவையான மண் சிட்டிகள், பித்தளை, செம்பு, வெள்ளி பாத்திரங்களை வைத்து விற்கலாம். லட்சுமி சிலையை வைத்து தீபாவளியின் முதல் நாளில் வழிபட்டால் இல்லம் சிறக்கும் என்பது ஐதீகமாகும்.

3. சிலைகள் கடை : வடஇந்தியாவில் பிள்ளையார் மற்றும் லட்சுமி தேவியின் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் காளி தேவியின் சிலைகளை வைத்து வெகு விமரிசையாக வழிபாடுகள் நடைபெறும். இதற்காக ஒரு சிறிய தற்காலிக கடையை அமைத்து அதில் சிறிய முதலீட்டில் லட்சுமி தேவி, விநாயகர், காளி தேவியின் சிலைகளை விற்கலாம். அத்துடன் தெய்வங்களின் புகைப்படங்களையும் விற்கலாம்.

4. சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகள் : காற்று மற்றும் ஒலி மாசை ஏற்படுத்தாத இந்தப் பட்டாசுகளை விற்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகம் தோன்றியுள்ளதால் இந்தப் பட்டாசுகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தருகிறது.

5. தீபங்கள் கடை : தீபாவளி என்பதே ஒளித் திருநாளாகும். இந்த நாளில் எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்று மக்கள் வழிபடுவார்கள். அகண்ட தீபம், களிமண் தீபம், எல்இடி தீபம், மிதக்கும் தீபம், டெரகோட்டா தீபம் உள்பட ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இதன் மூலம் நல்ல லாபத்தை எட்டலாம்.

6. பலகாரக் கடை : தீபாவளி திருநாளன்று பட்சணங்கள் இல்லாமல் இருக்க முடியாது. பலகாரக் கடைகள் போட்டால் நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். சுவையான இந்திய பலகாரங்களான சமோசா, ஆலு போண்டா, பனீர் டிக்கா, கண்டா பஜ்ஜி, சாட் போன்ற ரகங்களை விற்றால் நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

7. இனிப்புகள் ஸ்டால் : தீபாவளி என்றால் இனிப்புகள் இல்லாமலா. இந்தப் பண்டிகை காலத்தில் சுவையான ருசியான இனிப்பு வகைகளை வீட்டிலேயே செய்து விற்கலாம். பாசிப்பருப்பு அல்வா, ரசகுல்லா, குலாப்ஜாமூன், ஜிலேபி, லட்டு போன்ற வகைகளை செய்து விற்று சம்பாதிக்கலாம்.

8. சாக்லெட் கடை : சிலர் தீபாவளிக்கு சாக்லெட் டப்பாக்களை வாங்கி பரிசளிப்பார்கள். அந்த வகையில் வீட்டில் செய்த சுவையான ஹோம்மேட் சாக்லெட் வகைகளை செய்து விற்கலாம். இவற்றை வண்ண வண்ண கிப்ட் ரேப்பர்களை சுற்றி வைத்தால் கண்ணைக் கவரும்.

9. ரங்கோலி கடை : தீபாவளி தினத்தன்று நம் வீட்டுக்கு லட்சுமி தேவையை வரவேற்பதற்காக வீட்டு வாசலிலும் முற்றங்களிலும் வண்ண வண்ண ரங்கோலி கோலங்களை போடுவது பாரம்பரியமாகும். ரங்கோலி கோலம் போடுவதற்குத் தேவையான மாவு, கலர் பொடி போன்ற பொருட்களை வைத்து விற்கலாம்.

10. அலங்கார கடை : தீபாவளி தினத்தன்று அழகிய தோரணங்கள், பூஞ்சட்டிகள் வைத்து வீட்டில் அலங்காரங்களை மக்கள் செய்வார்கள். இந்த அலங்காரங்களுக்குத் தேவையான பொருட்களை வைத்து விற்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+