6 வருடத்தில் அசாதாரணமான வளர்ச்சி.. எஸ்பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் 11,363% வரை வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

இதில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மீண்டும் வேகமெடுக்கும் பிட்காயின்.. மற்ற கிரிப்டோகளின் நிலவரம் என்ன.. லாபமா..!

ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 17 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் வளர்ச்சி

நிறுவனங்கள் வளர்ச்சி

இப்படி ஒரு சூழலில் தான் லஞ்ச ஒழிப்பு துறையினர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான, பல இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனையில் குறிப்பாக எஸ்பி வேலுமணி சம்பந்தபட்ட நிறுவனங்கள் பல மடங்கு அசுர வளர்ச்சியினை கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டெண்டர்களில் முறைகேடு

டெண்டர்களில் முறைகேடு

மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் போது முழு விவரமும் தெரிய வரும்.

அசுர வளர்ச்சி
 

அசுர வளர்ச்சி

DVAC-யின் கருத்துப்படி, முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 10 நிறுவனங்கள், பிரம்மாண்ட வளர்ச்சியினை கண்டுள்ளன. குறிப்பாக சிஆர் கட்டுமான நிறுவனம் (CR construction) 38 லட்சம் ரூபாயில் இருந்து, 43.5 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது 2012 -13 முதல் 2018 - 19ம் ஆண்டுகளுக்கு இடையில் 11,363% வளர்ச்சி கண்டுள்ளது.

ஆதரவு பெற்ற நிறுவனங்கள்

ஆதரவு பெற்ற நிறுவனங்கள்

சிஆர் கட்டுமான நிறுவனம் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் தவிர, ஏஸ் டெக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ace-Tech Machinery India Private Limited), கான்ஸ்ட்ரோனிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட் (Constronics Infra Limited), கான்ஸ்ட்ரோமல் குட் பிரைவேட் லிமிடெட் (Constromall Good Pvt Ltd), ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Sri Maha Ganapathy Jewellers Private Limited), ஆலயம் பவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Aalayam Foundations Private Limited), வைதூர்யா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Vaidurya Hotels Private Limited), ரத்னா லக்ஷ்மி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Ratnaa Lakshmi Hotels Private Limited), ஆலம் கோல்ட் & டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Aalam Gold & Diamonds Private Limited), AR ES PE Infra Private Limited உள்ளிட்ட பல நிறுவனங்களும் பயன் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற நிறுவனங்கள்

பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற நிறுவனங்கள்

இதே கேசிபி இன்ஜினியரிங் (KCP Engineering) நிறுவனம் 42 கோடி ரூபாயில் இருந்து 454 கோடி ரூபாய் டர்ன் ஒவர் செய்துள்ளது. இதன் வருவாய் விகிதமானது 967% அதிகரித்துள்ளது.

இதே வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் கடந்த 2012 -13ல் 2.02 கோடி ரூபாயில் இருந்து 2018 - 19ல் 66.7 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது 3202% வளர்ச்சியினை இந்த காலகட்டத்தில் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலயம் பவுண்டேஷன்ஸ் வளர்ச்சி

ஆலயம் பவுண்டேஷன்ஸ் வளர்ச்சி

இதே போல ஆலயம் பவுண்டேஷன்ஸ் 2012 - 13ல் 55 லட்சம் ரூபாயில் இருந்து, 2018 - 19ல் 15 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது 2,636% வளர்ச்சியினை இந்த காலகட்டத்தில் பதிவு செய்துள்ளது.

இதே ACE tech நிருவனம் 34 கோடி ரூபாயில் இருந்து 155 கோடி ரூபாயாக வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது 354% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

2 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி

2 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி

ஓசுர் பில்டர்ஸ் மற்றும் கான்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் 2 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியினைக் கண்டுள்ளன.

குறிப்பாக ஓசுர் பில்டர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 2015 - 16ம் ஆண்டில் வெறும் 93 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்திருந்த நிறுவனம், 2017 - 18ல் 19.6 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. இது 2008% வளர்ச்சியினைக் கண்டுள்ளது.

கான்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியாவின் மெகா வளர்ச்சி

கான்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியாவின் மெகா வளர்ச்சி

இதே கான்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியானது 86 லட்சம் ரூபாயில் இருந்து, 42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 4,796% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

மொத்தத்தில் பல நிறுவனங்களும் பல மடங்கு வளர்ச்சியினை கண்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறியுள்ளனர்.

கான்ஸ்ட்ரோமல் குட் நிலவரம்?

கான்ஸ்ட்ரோமல் குட் நிலவரம்?

கான்ஸ்ட்ரோமல் குட் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது ஒரு வருடத்தில் 273% வளர்ச்சி கண்டுள்ளது. இது 2018 - 19ல் 84 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்திருந்த நிலையில், 2019 - 20ல் 3.14 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது.

இதே Aalam Gold and Diamonds நிறுவனத்தின் வருவாய் விகிதம் ஒரு வருடத்தில் 106 கோடி ரூபாயில் இருந்து, 160 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

மொத்தத்தில் எஸ்பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் இந்த காலகட்டங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 firms reportedly linked to former AIADMK minister SP velumani showed growth up to 11,363% in just 6 years

According to the DVAC report, 10 firms reportedly linked to former AIADMK minister SP velumani. That firm’s are growth up to 11,363% in 6 years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X