இந்திய மக்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த இந்திய ரிசர்வ் வங்கி-யின் கிளை அமைப்பான Central Bank Digital Currency (CBDC) அமைப்பு உருவாக்கி வெளியிடும் ரீடைல் வர்த்தகச் சந்தையில் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாயின் சோதனை டிசம்பர் 1 ஆம் தேதி அதாவது இன்று சோதனை செய்யப்பட உள்ளது.
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் என்பது பொதுமக்களாகிய நாம் பயன்படுத்துவது என்பதால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை எப்படிப் பயன்படுத்துவது? இந்தப் புதிய டிஜிட்டல் ரூபாய் எப்படியிருக்கும்? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது.
நவம்பர் 1 ஆம் தேதி CBDC அமைப்பு ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயை சோதனை செய்த நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி ரீடைல் டிஜிட்டல் ரூபாயை சோதனை செய்யப்பட்ட உள்ளது.
ரூபாய் குறியீடு
இந்திய ரூபாய்க்கு எப்படி ₹ என்ற குறியீடு உள்ளதோ அதேபோல் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹ என்ற குறியீடு உருவாக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி-யின் கிளை அமைப்பான Central Bank Digital Currency (CBDC) இந்தியாவில் இரண்டு வகையான டிஜிட்டல் ரூபாய்ப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் குறியீடு
இதற்காக மொத்த விலை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் வகையில் e₹-W குறியீடு உடன் ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயும், சில்லறை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-R என்ற குறியீடும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டோக்கன்
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் e₹-R என்பது ஒரு டோக்கன் போல இயங்கும், மக்கள் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பணப் பரிமாற்றத்தை வங்கிகள் அளிக்கும் டிஜிட்டல் வேலெட் வாயிலாகச் செலுத்தவும், பெறவும் முடியும். மேலும் இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ தற்போது UPI சேவை போல் QR கோடு வாயிலாக எளிதாகச் செய்ய முடியும்.
நாணய மதிப்பீடு
மேலும் இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் தற்போது பயன்பாட்டில் உள்ள 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் மற்றும் நாணய மதிப்பீட்டில் டோக்கன் உருவாக்கப்பட்டு அதை வங்கிகளின் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்படும்.
டிஜிட்டல் ரூபாய் வேலெட்
உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலெட்-க்கு மாறுவதன் மூலம் நீங்கள் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். இதேபோல் டிஜிட்டல் ரூபாயை பொதுவாகப் பயன்படுத்தும் கணக்கிற்கு மாற்றப்படும் போது சாதாரண ரூபாய் கிடைக்கும். டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக்கும் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ரூபாய் வேலெட் அளிக்கும்.
டிசம்பர் 1
டிசம்பர் 1 ஆம் தேதி நடக்கும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனை திட்டத்தில் குறிப்பிட்ட 4 நகரத்தில் மட்டும், வாடிக்கையாளர் - விற்பனையாளர்கள் அடங்கிய சிறிய வட்டத்திற்குள் ரீடைல் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்திச் சோதனை செய்யப்பட உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இதைப் பெற வாய்ப்புகள் இல்லை.
முதல் கட்ட சோதனை
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் முதல் சோதனை திட்டத்தில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய 4 வங்கிகள் மத்தியில் பரிமாற்றம், வரவு கணக்குகளின் பதிவு ஆகியவற்றைச் சோதனை செய்யப்பட உள்ளது.
விரிவாக்கம்
ரீடைல் டிஜிட்டல் ரூபாயின் முதல் சோதனை திட்டத்தைப் பொறுத்து அடுத்தகட்ட சோதனையில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களைத் தவிர அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படத் தற்போது முடிவு செய்யப்பட்டது.
8 வங்கிகள்
2வது கட்ட ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி உடன் கூடுதலான பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய 4 வங்கிகளுடன் சேர்ந்து 8 வங்கிகள் இந்தச் சோதனையில் பங்கேற்க உள்ளது.
5ஜி டெலிகாம் சேவை
இந்தியாவில் எப்படி 5ஜி டெலிகாம் சேவையை மக்களுக்கு அறிமுகம் செய்யும் முன்பு டெலிகாம் நிறுவனங்களும், மத்திய அரசும் நாட்டின் முக்கியமான நகரங்களில் சோதனை செய்து பார்த்து போதுமான வேகம் மற்றும் சேவை தரம் பரிசோதனை செய்து அதன் பின்பு டெலிகாம் நிறுவனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு ஒவ்வொரு நகரங்களாக அறிமுகம் செய்யப்பட்டு வந்தது.
ஆர்பிஐ
இதேபோல் தான் ஆர்பிஐ இந்த டிஜிட்டல் ரூபாயை குறுகிய வட்டத்திற்குள் சோதனை செய்து அதன் பின்பு நாடு முழுவதும் ஓரே நேரத்தில் மக்களுக்கு அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. டிஜிட்டல் ரூபாய் மூலம் பணச் சலவை, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி ஏய்ப்பு போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications