டெல்லி: இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட நிதி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இடம் பெறப் போகின்றன. அவற்றின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் பட்ஜெட் உரையை புரிந்து கொள்வது நமக்கு எளிமையாக இருக்கும்.
Fiscal Policy-நிதிக் கொள்கை : இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு வருவாய் மற்றும் செலவினம் ஆகியவற்றை எப்படி மேலாண்மை செய்யப்போகிறது என்பது தான் நிதிக் கொள்கையாகும், இதில் வரிவிதிப்பு செலவினம், அரசு பெறப்போகும் கடன் உள்ளிட்டவை அடங்கும்.

Monetary Policy -பணமதிப்பு கொள்கை: பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இந்திய ரிசர்வ் வங்கி பண விநியோகத்தை கட்டுப்படுத்துவது மற்றும் வட்டி விகிதங்கள் உள்ளிட்டவை தொடர்பான கொள்கையை வகுக்கும். இதுதான் பண மதிப்பு கொள்கை.
GST-ஜிஎஸ்டி வரி: விற்பனை மற்றும் பொருட்களின் நுகர்வு, சேவைகள் ஆகியவற்றிற்காக இந்தியா முழுவதும் விதிக்கப்படக்கூடிய ஒரு வரி விதிப்பு முறை தான் ஜிஎஸ்டி.
Fiscal Deficit - நிதி பற்றாக்குறை : அரசின் மொத்த செலவினம் மற்றும் அரசின் மொத்த வருவாய் (கடன்கள் தவிர்த்து) ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசமே நிதி பற்றாக்குறை. இதன் மூலம் அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டி இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.
Union Budget - மத்திய பட்ஜெட்: மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யக்கூடியது தான் யூனியன் பட்ஜெட். இதில் அரசு எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கிறது எவ்வளவு செலவு இருக்கும் என கணிக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
Direct and Indirect Taxes- நேரடி மற்றும் மறைமுக வரிகள் : தனிநபர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் மீது அரசு விதிக்கக்கூடிய வருமான வரி, கார்ப்பரேட் வரை போன்ற நேரடி வரிகள் மற்றும் ஜிஎஸ்டி , சுங்கவரி போன்ற மறைமுக வரிகள் ஆகும்.
Capital expenditure -மூலதன செலவினம்: உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறிப்பிட்ட சொத்துக்களை வாங்குவது, நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வது போன்றவற்றுக்காக அரசுக்கு ஏற்படும் செலவுகள் மூலதன செலவினம் என அழைக்கப்படுகிறது. இந்த செலவினங்கள் நீண்ட கால அடிப்படையில் அரசுக்கு லாபத்தை தரக்கூடியவையாக இருக்கும்.
Revenue expenditure- வருவாய் செலவினம்: அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பொதுநல திட்டங்களுக்கான மானியம் தொகை மற்றும் வட்டி வருமானம் ஆகியவை இதில் அடங்கும்.
Disinvestment - டிஸ்இன்வெஸ்ட்மென்ட் : அரசு தன்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்று பணமாக்குவது அல்லது பொது துறை நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து தன்னுடைய வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
GDP - ஜிடிபி ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு. இது பொதுவாக சதவீத அடிப்படையில் வழங்கப்படும்.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications