ஈரான் நாட்டில் நிகழும் போர் நம் வீட்டு அடுப்படி வரை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மூன்று வார காலமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கிறது. முதல் கட்டமாக எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தி வைத்தன.
போர் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து எல்பிஜி கப்பல்கள் வராமல் தடைப்பட்டு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தன. எனவே பொதுமக்கள் எங்கே தங்களுடைய வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என அச்சம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வைத்தனர். இந்த சூழலில் தான் மத்திய அரசு நாடு முழுவதும் எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி என பல்வேறு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு முன்பதிவு செய்து பத்து பதினைந்து நாட்கள் ஆகியும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படவில்லை என தொடர்ச்சியாக புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். கேஸ் அலுவலகங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் இருப்பதை காண முடிகிறது. பல்வேறு வாடிக்கையாளர்களும் காலி சிலிண்டர்களை கொண்டு சென்று குடோனிலேயே நேரடியாக ரீஃபில் சிலிண்டர்களை எடுத்து கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
சிலிண்டர் விநியோகத்தில் திடீரென கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தான் இதற்கு காரணம். இந்த சூழலில் தான் நிலைமையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு சமையல் சிலிண்டரின் எடையை 14.2 கிலோ எடையில் இருந்து 10 கிலோவாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது வாரமாக ஈரானின் போர் நீடித்து வருகிறது இந்த போர் சூழல் எப்போது முழுமையாக சரியாகும் எல்பிஜி கப்பல் போக்குவரத்து பழைய நிலைக்கு எப்போது வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த சூழலில் தான் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து வீடுகளுக்கும் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய சிலிண்டர் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வழங்கப்படுகிறது, அதனை 10 கிலோவாக குறைத்து விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு கேஸ் சிலிண்டர் சராசரியாக 40 லிருந்து 45 நாட்கள் வரை வரும், இதுவே 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ஆக இருந்தால் அது 25 லிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே கிடைக்கும்.
சமீபத்தில் தான் அரசு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை நகர்ப்புறங்களுக்கு 25 நாட்கள் என்றும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்கள் என்றும் நீட்டித்திருக்கிறது. இதற்கிடையே சிலிண்டர்களின் எடையை குறைத்தால் தங்களுடைய நிலைமை இன்னும் மோசமாகும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுஜாதா சர்மா, சிலிண்டரின் எடையை குறைப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என கூறியிருக்கிறார் இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான ஒரு தகவல் தான் என்றும் கூறியிருக்கிறார். இது போன்ற எந்த ஒரு முடிவையும் எண்ணெய் நிறுவனங்களோ மத்திய அரசோ எடுக்கவில்லை என திட்டவட்டமாக அவர் கூறியிருக்கிறார்.
எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் போதுமான அளவு எல்பிஜி இருப்பு இருக்கிறது பொதுமக்கள் மத்தியிலும் பேனிக் புக்கிங் என்பது குறைந்திருக்கிறது என்கிறார். வழக்கம் போல மக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என பதில் அளித்துள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications