வருமான வரி குறித்த 10 மிகப்பெரிய நிவாரண சலுகைகள்.. கொரோனா காலத்தில் ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் மிக மோசமான பாதிப்புகளுக்கு மத்தியில், வரி செலுத்துவோருக்கு ஆதரவளிக்கும் விதமாக, பல நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

 

மேலும் வரி செலுத்துவோருக்கும் எளிமையாக வருமான வரி தாக்கலை செய்யும் விதமாக பல அதிரடியான மாற்றங்களையும், சேவைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இன்னும் சில அறிவிப்புகளில் கொரோனாவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் அளிக்கும் வகையிலான சில அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் சாமனிய மக்களுக்கு என்ற சலுகை. என்ன நிவாரணம்? அப்படியென்ன 10 முக்கிய அறிவிப்புகள் வாருங்கள் பார்க்கலாம்.

வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

பலரும் கொரோனா காலத்தில் தங்கள் நிறுவனங்களிடம் இருந்தோ அல்லது நலம் விரும்பிகளிடம் இருந்தே, கொரோனாவினால் பண உதவிகளை பெற்றுள்ளனர். கொரோனா மருத்துவ உதவிகளுக்காக பெற்ற இந்த தொகை அளவுக்கு வருமான வரி விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019 - 20 மற்றும் அடுத்த ஆண்டுகளில் இந்த விலக்குகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண தொகைக்கு வரி விலக்கு

நிவாரண தொகைக்கு வரி விலக்கு

கொரோனாவினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கிடைத்த நிவாரணத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் நிதி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் 2019 - 20 மற்றும் அடுத்தடுத்த நிதியாண்டுகளுக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் – ஆதார் இணைப்பு
 

பான் – ஆதார் இணைப்பு

பான் - ஆதார் இணைப்புக்கும் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது. இது முன்னதாக ஜூன் 30வுடன் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பல முறை அவகாசம் கொடுத்திருந்தாலும், கொரோனாவின் காரணமாக நாட்டில் பல பகுதிகளில் லாக்டவுன் உள்ளது.

டிடிஎஸ் விவரங்கள் சான்றிதல்

டிடிஎஸ் விவரங்கள் சான்றிதல்

டிடிஎஸ் சம்பாதிக்க சம்பாதிக்க வரி செலுத்த உதவுகிறது. இது அரசுக்கு நிலையான வருமானம் வர வழிவகை செய்கிறது. இதில் சம்பளம் வாங்குவோருக்கு வரி கணக்கீடு விவரங்கள், கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் அடங்கிய சான்றிதல் வழங்கப்படும். இந்த சான்றிதலை ஜூன் 15க்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். இதனை ஜூலை 31, 2021க்குள் வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்ம் 16 சான்றிதல்

பார்ம் 16 சான்றிதல்

ஒரு நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் படிவம் தான் பார்ம் 16. இந்த சான்றிதழில் அந்தப் பணியாளர் சம்பாதித்த ஊதியம் மற்றும் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி ஆகியவை பற்றிய முழு விவரங்கள் இருக்கும். இது ஜூலை 15, 2021க்குள் கொடுக்கப்பட வேண்டிய நிலையில், இதற்கான அவகாசத்தினையும் அரசு ஜூலை 31, 2021 ஆக அதிகரித்துள்ளது.

விவாத் சே விஸ்வாஸ் திட்டம்

விவாத் சே விஸ்வாஸ் திட்டம்

விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மார்ச் 31 எனவும், கட்டணம் செலுத்துவதற்கான தேதி அக்டோபர் 31 எனவும் வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வருமான வரி, வட்டி, அபராதம், கட்டணம் போன்ற விவகாரங்களை தீர்த்து வைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

Array

Array


வருமான வரி விலக்கினை கோருவதற்கான செயல்பாட்டிற்காக நிறுவனங்கள் செப்டம்பர் 31, 2021 அல்லது அதற்கு முன்பாகவே கோரலாம்.
அதாவது 54, 54ஜிபி பிரிவின் கீழ் மூலதன ஆதாயங்களுக்காக ரோல் ஓவர் நன்மை கோருவதற்கான முதலீடு, கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்வதற்காக தேதியானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஏப்ரல் 1 அல்லது அதற்கு பிறகு செய்ய வேண்டிய முதலீட்டினை இப்போது செப்டம்பர் 30 வரை செய்யலாம்.

Array

Array

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள், இந்தியாவில் வசிப்பவர், மொத்த ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி கணக்கிட்டால் 0 ரூபாய் செலுத்த வேண்டியவர்கள், வங்கி டெபாசிட்டில் இருந்து வரும் வட்டி வருமானம், அடிப்படை வருமான வரி வரம்பை விட கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு எல்லாம் இந்த படிவம் 15 ஹெச்-ஐ நிரப்பி, வட்டி கொடுக்கும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கொடுத்து டிடிஎஸ்-ல் இருந்து விலக்கு பெறலாம்.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்


பொதுவாக இந்த Form 15 G / H-ஐ நிதி ஆண்டின் தொடக்கத்தில் கொடுப்பார்கள். அப்போது தான் அந்த நிதி ஆண்டில் இருந்து வரும் வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். இந்த படிவத்தினை கொடுக்க ஜூன் 30, 2021வுடன் முடிவடையும் காலாண்டிற்கான படிவம், ஜூலை 15 அல்லது அதற்கு முன்பாகவே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இது ஆகஸ்ட் 31, 2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் 2020 - 21ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கலை செப்டம்பர் 30,2021க்குள் தாக்கல் செய்யலாம். இதே நிறுவனங்கள் நவம்பர் 30க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தன நபர்கள் 2020 - 21ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கலை செப்டம்பர் 30,2021க்குள் தாக்கல் செய்யலாம். இதே நிறுவனங்கள் நவம்பர் 30க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 mega tax reliefs announced by the government for taxpayers; check details here

Income tax updates.. 10 mega tax reliefs announced by the government for taxpayers; check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X