இந்திய மக்கள் தொகையில் 0.0005 சதவீதம் தான் பார்சி சமூகத்தினர் இருக்கின்றனர். ஆனால் இந்தியாவின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இவர்களின் பங்கு அளப்பரியது. இந்தியாவின் வளர்ச்சியில் பார்சி சமூகத்தினர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதற்கு பின்வரும் 10 நபர்களே சாட்சி.
1. ஜே ஆர் டி டாடா : இந்தியாவின் தொழில்துறைக்கு அடித்தளமிட்டவர் தான் இவர். அப்படிதான் டாடா குழுமம் சிறிய அளவில் தொடங்கப்பட்டு தற்போது உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் விமான சேவை நிறுவனத்தை தொடங்கியவர் இவர்தான். நவீன இந்திய தொழில்துறையின் தந்தை என இவரை அழைக்கலாம்.

2. ஹோமி பாபா : இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் தான் ஹோமி பாபா. இவர் இந்திய ஆட்டோமிக் எனர்ஜி துறையை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் தான் பாபா ஆட்டோமேக் ரிசர்ச் சென்டர் என்பதை உருவாக்கி இந்தியா அணுசக்தி நாடாக உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.
3. ரத்தன் டாடா: டாடா குழுமத்தை மக்களுக்கான ஒரு குழுமமாக மாற்றியதோடு மட்டுமில்லாமல் டாடா குழுமம் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக கால் பதித்து மக்களுக்கான பொருட்களை உருவாக்கி வழங்குவதற்கு வித்திட்டவர் தான் ரத்தன் டாடா.
4. தாதாபாய் நவரோஜி : கிராண்ட் ஓல்டு மேன் ஆஃப் இந்தியா என அழைக்கப்படுபவர் தான் இவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். மேலும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மேலும் பொருளாதாரத் துறையிலும் இவர் சிறந்தவராக இருக்கிறார்.

5. சாம் மானேக்ஷாவ்: இந்தியாவின் புகழ்பெற்ற ராணுவ தலைவர்களில் ஒருவர். 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்தான் சாம் மானேக்ஷாவ். இந்த வெற்றிதான் பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாக காரணமாக இருந்தது.
6. சோலி சொராப்ஜி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர் தான் இவர் . இந்தியாவில் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை காப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் .
7. ரோஹிங்டன் மிஸ்திரி: புகழ்பெற்ற நாவலாசிரியர் ,இந்திய வாழ்க்கையை பிரதிபலிக்க கூடிய நாவல்களை உலகிற்கு கொண்டு வந்தவர் தான் இவர். சமகால இந்திய இலக்கியத்தில் முக்கியமான ஒரு நபராக இவர் தொடர்ந்து நீடிக்கிறார்.
8. நானி பால்கிவாலா: முக்கியமான வழக்கறிஞராகவும், பொருளாதார நிபுணராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். கேசவானந்தா பாரதி வழக்கில் இந்திய அரசியலமைப்புக்காக வாதிட்டதில் பெரும் புகழ்பெற்றவர்.
9. பிகாஜி கமா: இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ஒரு பெண் தலைவர் தான் இவர். 1907 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
10. நஸ்லிவாடியா: வாடியா குழுமத்தின் தலைவர் தான் இவர். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக ஆடை. உணவு மற்றும் விமான போக்குவரத்து துறையில் வாடியா குழுமம் செயல்படுகிறது. இதற்கு வித்திட்டவர் நஸ்லிவாடியா . இந்த நிறுவனத்தின் கீழ் தான் பாம்பே டையிங், பிரிட்டானியா நிறுவனங்கள் செயல்படுகின்றன.


Click it and Unblock the Notifications