மதுரை: தமிழ்நாட்டின் ஐடி துறை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு சிலிக்கான் வேலி-யை உருவாக்கும் முயற்சிகளுக்கான பல நிர்வாக மாற்றங்களை தமிழ்நாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் சிறிதும் பெரிதுமாக பல ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து அலுவலகத்தை திறந்து வருகிறது. இதோடு ஏற்கனவே இருக்கும் டெக் நிறுவனகங்கள் அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் புதிய அலுவலகத்திற்கு மாறி வருகிறது. இதுபோல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெக் சேவை நிறுவனங்களுக்கு போதுமான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 10 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதாவது IT TECH PARK அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்த தகவல் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான கனெக்ட் மதுரை 2023 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதோடு தமிழ்நாட்டில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்விதமான தாமதமுமின்றி செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை மேம்படுவதிலும், எதிர்காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஐடி சேவை துறை முக்கிய பங்கு வகிக்க உள்ளது என தெரிவித்துள்ளார். 2.5 வருட திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பலமுக்கிய திட்டங்களும், சேவைகளும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதேபோல் தமிழக அரசு புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது. மேலும் PTR அவர்கள் ரெசிஷன் குறித்து பேசும் போது, வளரும் நாடுகளில் ரெசிஷன் என்பது மிகவும் அரிது, கடந்த 40 வருடத்தில் வளரும் நாடுகளில் ரெசிஷன் வந்தது இல்லை.
கொரோனா தொற்று காலத்தில் வளரும் நாடுகளில் ரெசிஷன் வந்த போதும் சென்னை ஐடி துறை வளர்ச்சி பாதையில் இருந்தது என தெரிவித்தார் .
More From GoodReturns

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications