உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் கடந்த சில நாட்களாவே தனது 60000 டாலர் அளவீட்டை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டைப் பெற்று விலையை நிலைநாட்டி வந்தது. ஆனால் தற்போது விலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவை சந்தித்துள்ளது.
பிட்காயினைப் போலவே எதிரியம், ரிப்பிள், சோலானா, கார்டானோ, போல்காடாட் ஆகிய முன்னணி கிரிப்டோகரன்சிகள் அதிகப்படியான சரிவை பதிவு செய்த நிலையில், வழக்கம்போல் பெயர் தெரியாத பல கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது.
கேஷ்பேக்ப்ரோ
காயின்மார்கெட்கேப் தளத்தின் தகவல்கள் படி கடந்த 24 மணிநேரத்தில் கேஷ்பேக்ப்ரோ (CBP) என்ற கிரிப்டோகரன்சி 2640.79 சதவீதம் உயர்ந்து 3.98 டாலர் என்ற உயர்வை எட்டியுள்ளது. இதேபோல் Angry Squid என்ற மற்றொரு கிரிப்டோகரன்சி 486.78 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
24 மணிநேர வளர்ச்சி
இதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கோமாடிகா (KROM) 219.54 சதவீதமும், ஜென்ஷின்ஷிப்இன் (GSHIB) 211.39 சதவீதமும் வளர்ச்சி அடைந்து உள்ளது. மேலும் Portify, Squirt Game, Enhance, AtromG8, CryptoGodz ஆகியவை 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.
பிட்காயின் மதிப்புச் சரிவு
ஆனால் அதிகச் சந்தை மதிப்புக் கொண்ட பிட்காயின் 56,024.55 டாலர் வரையில் குறைந்து 6.24 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. மேலும் எதிரியம் 4.389 சதவீதம் சரிவு, ரிப்பிள் 6.02 சதவீதம் சரிவு, சோலானா 7.53 சதவீதம் சரிவு, கார்டானோ 3.15 சதவீதம் சரிவு, போல்காடாடா 5.32 சதவீதம் சரிவு, டெரா 3.70 சதவீதம் சரிவு, ஸ்டெல்லார் 3.05 சதவீதம் சரிவு என டாப் 10 கிரிப்டோகரன்சி அனைத்தும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
டேப்ரூட் அப்டேட்
கிரிப்டோ சந்தையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டேப்ரூட் அப்டேட் முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே அதிகளவிலான முதலீடுகள் பிட்காயின் மீது குவிந்தது. ஆனால் தற்போது சிறு சந்தை மதிப்புடைய கிரிப்டோகரன்சியிலும், புதிதாகச் சந்தைக்கு வரும் கிரிப்டோகரன்சியிலும் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது.
கிரிப்டோ முதலீட்டாளர்கள்
பெரும்பாலான கிரிப்டோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை போல் நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள், இதன் காரணமாகக் குறுகிய காலத்தில் அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறு சந்தை மதிப்புடைய கிரிப்டோகரன்சியிலும், புதிதாகச் சந்தைக்கு வரும் கிரிப்டோகரன்சியிலும் அதிகப்படியான முதலீடு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications