வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..!

கடந்த ஒரே வாரத்தில் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 1.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 1,56,317.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு 60,000 புள்ளிகளை தொட்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 1.74% அதிகரித்து அல்லது 1032.58 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்த வலுவான ஏற்ற சந்தையில் இந்திய சந்தையில் உள்ள டாப் 10 நிறுவனங்களும் இந்த வாரம் ஏற்றத்தினை கண்டுள்ளன. இதில் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான், வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மூலதனமானது 58,671.55 கோடி ரூபாய் அதிகரித்து 15,74,053 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் டிசிஎஸ்

இரண்டாவது இடத்தில் டிசிஎஸ்

இன்ட்ராடே வணிகத்தில் அதன் சந்தை மதிப்பானது 16 லட்சம் கோடி ரூபாயினை தாண்டிய நிலையில், அதன் பிறகு முடிவில் பங்கு விலையானது சற்று குறைந்த நிலையில், சந்தை மூலதனமும் சற்று குறைந்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 15,110.63 கோடி ரூபாய் அதிகரித்து, 14,32,013.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி

மூன்றாவது இடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி

இதே மூன்றாவதாக தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளது. இதன் சந்தை மூலதனம் 10,142 கோடி ரூபாய் அதிகரித்து, 8,86,739.86 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், 6,068.69 கோடி ரூபாய் அதிகரித்து, 4,05,970.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
யும், இதே முன்னணி பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் (SBI) அதிக சந்தை மதிப்பினை இழந்துள்ளன.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்

இதனையடுத்து ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 4,863.65 கோடி ரூபாய் அதிகரித்து, 6,44,199.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 4,254.75 கோடி ரூபாய் அதிகரித்து, 4,01,978.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம்

ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம்

ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 2,523.56 கோடி ரூபாய் அதிகரித்து, 5,13,073.85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 1,904.22 கோடி ரூபாய் அதிகரித்து, 5,01,080.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+