அமெரிக்கா: தற்போது Side Hustle எனப்படும் பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிப்பது டிரெண்டாக உள்ளது. அதாவது நாம் முக்கியமாக செய்யும் வேலையை தவிர்த்து பார்ட் டைமாக சில வேலைகளை செய்து பணம் சம்பாதிப்பதை SIDE HUSTLE எனக் கூறுகிறோம்.
வேலையில் இருப்பவர்கள் அல்லது கல்லூரி மாணவர்கள் இதுபோல சைட் ஹசுலில் ஈடுபட்டு குறிப்பிட்ட தொகையை வருமானமாக ஈட்டி தங்களது செலவை பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு சிறுவன் 10 வயதிலேயே இது போல பார்ட் டைம் தொழிலை செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறார் .

அமெரிக்காவை சேர்ந்த ஜேக்கப் ஹீட்மேனுக்கு 10 வயது தான் ஆகிறது. காலையில் எழுந்தவுடன் தன்னுடைய அன்றாட பணிகளை முடித்துவிட்டு, காலை உணவை சாப்பிட்டு விட்டு பள்ளி செல்வதற்கு முன்பு இருக்கக்கூடிய அந்த குறுகிய நேரத்தில் ஒரு சிறு தொழிலை செய்து பல லட்சங்களை சம்பாதிக்கிறார்.
வீட்டின் பேஸ்மென்ட் தான் இவரது சிறிய ஆலை மறைந்திருக்கிறது. இங்கே தான் 3டி பிரிண்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஜேக்கப் ஹீட்மேன். 3டி பிரிண்டர் முறையில் பல்வேறு பொம்மைகளை வடிவமைத்து அதனை விற்பனை செய்து வருகிறார்.
பள்ளி செல்வதற்கு முன்பாகவே பொம்மை வடிவங்களையும் அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் செய்து விடுவார். இவர் வீடு திரும்பும் போது பொம்மைகள் தயாராக இருக்கும்.
இந்த பொம்மைகளை தன்னுடைய படிக்கும் மாணவர்களுக்கும் தன்னுடைய சொந்த இணையதளத்திலும் விற்பனை செய்கிறாராம். ஒவ்வொரு பொம்மையும் 20 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1600 என்ற விலைக்கு விற்பனை செய்கிறார்.
ஒரு நாளைக்கு தன்னுடைய இந்த 3d பிரிண்ட் தொழிலுக்காக மூன்று மணி நேரத்தை செலவிடுவதாக சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இவர் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹீட்மேன் பெற்றோர் இவருக்கு பிறந்தநாள் பரிசாக 3டி பிரிண்டர் ஒன்றை வாங்கித் தந்துள்ளனர். இதனை வைத்துக்கொண்டு youtube இல் உள்ள வீடியோக்களை பார்த்து 3டி பிரிண்டிங் முறைகளை இவர் கற்றுக் கொண்டாராம்.
முதன்முதலில் குடும்ப நண்பரின் ரிட்டையர்மென்ட் பார்ட்டிக்கு செல்லும் போது தானே வடிவமைத்த சிகாகோ டவரின் மாதிரிகளை இவர் பரிசாக தந்துள்ளார்.
இதனை அடுத்து நண்பர்களுக்கு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இப்படியே இந்த சிறு தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன்னுடைய படிப்பு செலவுகளை பார்த்துக் கொள்வதாக கூறும் ஜேக்கப் ஹீட்மேன் தன்னுடைய கல்லூரி செலவுக்கு தேவையான தொகையும் இதிலிருந்து தான் சேமித்து வருவதாக கூறியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications