ரஷ்ய அதிபர் புதின் இந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார் . அவருடைய இந்த பயணம் சர்வதேச அளவில் உற்றுநோக்கும் ஒரு பயணமாக மாறி இருக்கிறது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக மோதல் நீடித்து வருகிறது. இந்திய பொருட்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி தான் டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதித்தது . ஆனால் இந்த வரி விதிப்பு இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட வைத்தது.

இத்தகைய சூழலில் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தருகிறார் ரஷ்ய அதிபர் புதின். டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் புதின் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது . இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருநாட்டு தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் ,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்க இருக்கின்றன.
இந்திய இன்ஜினியரிங் பொருட்கள் ரஷ்ய சந்தையில் தங்களை விரிவாக்கம் செய்வது, இந்திய உணவு துறையில் ரஷ்யா நிறுவனங்கள் முதலீடு செய்ய வருவது , டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்டவை குறித்து இந்த பயணத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய மருந்து தயாரிப்புகளை அதிக அளவில் வாங்குவதற்கு ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது .

வழக்கமான பாதுகாப்பு துறை ஒப்பந்தம் மட்டுமில்லாமல் பொறியியல், உணவு, டிஜிட்டல் சேவைகள் மற்றும் மருந்து ஏற்றுமதி ஆகிய பிரிவுகளில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான தொழில்துறை சார்ந்த ஒத்துழைப்பு, பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் முக்கியமாக இதில் பேசப்படுகிறது.
தற்போது அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதித்திருக்கக்கூடிய சூழலில் இந்திய பொருட்கள் வேறு சந்தைகளை தேட வேண்டிய சூழலுக்கு ஆளாகி இருக்கின்றன . அந்த வகையில் ரஷ்யா இந்திய பொருட்களுக்கு முக்கியமான ஒரு மாற்று சந்தையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ரஷ்ய வேலைவாய்ப்பு சந்தை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்த தகுதியான நபர்களை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது இது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது .
வழக்கமாகவே ஆண்டுக்கு ஒரு முறை இந்திய ரஷ்ய தலைவர்களுக்கிடையே சந்திப்பு நடக்கும் தான் . ஆனால் இந்த முறை நடக்கக்கூடிய சந்திப்பு டிரம்பின் வர்த்தக மோதலுக்கு மத்தியில் நடைபெறுவதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு உறவு மட்டுமில்லாமல் இந்த முறை வர்த்தக உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
டிரம்பின் அழுத்தம் காரணமாக இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்து விட்டு அமெரிக்க நிறுவனங்களிடம் எண்ணெய் வாங்க தொடங்கியிருக்கின்றன. இருந்தாலும் டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கான வரி விதிப்பை குறைக்கவில்லை. புதினின் இந்திய வருகை டிரம்பிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications