தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது திறமையான நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் ப ட்டாளத்தை வைத்துள்ளார். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.
அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமுடன் நேரடியாக இணைந்து பணியாற்ரும் முதல் இந்திய நடிகராக ஒரு மைல்கல்லை எட்டியதன் மூலம் அவர் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். இது பொழுதுபோக்கு துறையில் அவரது பரவலான புகழ் மற்றும் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் ஆகும்.

புஷ்பா படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சினிமா தவிர அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை சமூக தளங்களில் பெரும் பேச்சாக உள்ளது. ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்சில் உள்ள அவரது சொகுசு பங்களா படங்கள் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ளன.
Blessing என்று பெயரிடப்பட்டுள்ள அவரது ஜூபிளி ஹில்ஸ் பங்களா பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அதன் மதிப்பு ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் மிகவும் விலை மதிப்புக்கொண்ட வீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பங்களா அல்லு அர்ஜூன் மற்றும் அவரது மனை சினேகா ரெட்டி பெயரில் உள்ளது. ஆர்க்கிடெக்ட் ஆமிர் சர்மாவின் ஆமிர் அண்டு ஹமீதா அசோசியேட்டால் வடிவமைக்கப்பட்டது. தட்டையான மேற்கூரையுடன் மாடர்ன் ஆர்க்கிடெக்சரில் வெள்ளை நிறத்தில் சிறப்பாகக் காட்சியளிக்கிறது.
மினிமலிஸ்ட் முன் முகப்பில் எளிமை மற்றும் நேர்த்தியின் உணர்வை வெளிப்படுத்துகிறது, ஜன்னல்கள் பாரம்பரிய கட்டிடக்கலை அலங்காரங்களால் சுத்தமான மேற்பரப்புகளைக் கொண்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையின் நுட்பமான தொடுதலைச் சேர்க்கிறது. குறைவான நுட்பத்துடன் காட்சி தனித்துவத்தை காட்டுகிறது.
சமையல் மற்றும் டைனிங் ஏரியாக்கள் மிகவும் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி அலங்காரங்கள் அந்தப் பகுதியில் அழகுக்கு அழகு சேர்க்கிறது. குறைந்த பராமரிப்பு பொருட்களால் அல்லு அர்ஜூனின் வீடு கட்டப்பட்டுள்ளது. சிமெண்ட் இபாக்ஸியை பயன்படுத்தி தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 8000 சதுர அடியில் அமைந்துள்ள வீடு இரண்டு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications