இந்தியாவின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த மத்திய அரசு செய்து வரும் பல முயற்சிகளில் ஒன்றாக, புதன்கிழமை அபுதாபி நாட்டைச் சேர்ந்த MIC Redwood 1 RSC Limited என்ற சவரின் வெல்த் பண்ட் நிறுவனம் உள்கட்டுமான துறையில் செய்யும் நீண்ட கால முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்திற்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய நிதியியல் சட்டம் 2020-ன் கீழ் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரத்தியேக திட்டத்தின் கீழ் 100 சதவீத வருமான வரிச் சலுகை பெறும் முதல் நிறுவனம் MIC Redwood 1 RSC Limited தான்.
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய துறைகளைக் குறிவைத்து இத்தகைய சலுகை கொடுக்கப்படுவதால், அதிகளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும்.
நிதி அமைச்சகம்
இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கான பொருளாதாரத் திறக்கப்பட உள்ள நிலையில், சில முக்கியத் துறைகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மட்டும் அதிகளவிலான வரிச் சலுகை கொடுக்கப்பட உள்ளது. மேலும் இந்தியாவின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் வகையில் இத்துறையில் நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் சவரின் வெல்த் பண்ட் நிறுவனங்களுக்கு 100 சதவீத வரிச் சலுகை கொடுக்கப்பட உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100% வரி விலக்கு
அபுதாபி-யின் MIC Redwood 1 RSC நிறுவனத்திற்குக் கிடைத்த இந்த 100 சதவீத வரி விலக்கு மூலம் இந்தியாவில் இந்நிறுவனம் செய்யும் முதலீடு மூலம் கிடைக்கும் வட்டி வருமானம், டிவிடென்ட் வருமானம், நீண்ட கால மூலதன வருமானம் ஆகியவற்றுக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்க உள்ளது.
இத்தகைய சலுகையைச் சவரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பென்ஷன் பண்ட் நிறுவனங்களும் பெற முடியும் என இந்திய நிதியியல் சட்டம் 2020ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
மத்திய வருமான வரித் துறை 22 ஜூலை 2020ஆம் தேதி இந்திய உள்கட்டுமான துறையில் முதலீடு செய்ய விரும்பும் சவரின் வெல்த் பண்ட் நிறுவனங்களுக்கு 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், அதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகளையும் வெளியிட்டது.
இதன் அடிப்படையில் இந்திய உள்கட்டுமான துறையில் முதலீடு செய்யப் பல சவரின் வெல்த் பண்ட் மற்றும் பென்ஷன் பண்ட் நிறுவனங்களுக்கு விருப்பம் தெரிவித்து இருந்தது.
அன்னிய முதலீடுகள்
மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் முடங்கி இருக்கும் பல துறைகளில் அன்னிய முதலீடுகள் அளவு அதிகரித்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். நீண்ட கால முதலீடுகளுக்கு மட்டுமே வரிச் சலுகை என்பதால் பெரிய திட்டங்களுக்கான முதலீடுகள் இந்த வரின் வெல்த் பண்ட் மற்றும் பென்ஷன் பண்ட் நிறுவனங்கள் மூலம் பெற முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications