மும்பை: இந்தியாவின் கனவு திட்டமான மும்பை - அகமதாபாத் இடையிலான முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2023ஆம் ஆண்டிலேயே இதன் பணிகள் நிறைவடையும் என சொல்லப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக அந்த பணிகள் தடைபட்டன. இந்நிலையில் 2027ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இந்தத் திட்டத்திற்காக 100% நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்வே அமைச்சகம், இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில் தேசத்தின் முதல் புல்லட் ரயில் திட்டம் முக்கியமான மைல் கல்லை எட்டி இருக்கிறது என தெரிவித்துள்ளது.

இதன்படி பிரதமர் மோடியின் கனவு திட்டமாக பார்க்கப்படக்கூடிய இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் 100% முடிவடைந்து விட்டதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக மொத்தமாக 1390 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. அந்த மொத்த நிலமும் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதை அடுத்து எந்த இடையூறும் இன்றி கட்டுமான பணிகள் தொடங்க இருக்கின்றன. மேலும் இந்த புல்லட் ரயில் பாதைக்கான அடித்தளம் அமைக்கும் பணியானது குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி உள்ளது. அதாவது 341 கிலோமீட்டர் வரை உயர்த்தப்பட்ட ரயில் பாதை அமைப்பிற்கான அடித்தளத்தை அமைக்கும் பணி முடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகளுக்கு ஆதரவு அமைப்பாக இருக்கக்கூடிய Girder Casting பணியும் 231 கிலோமீட்டர் தொலைவிற்கு முடிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தற்போது ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இந்த பணி நிறைவடையும் என்றும் இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மும்பை அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் பாதை என்பது 1.08 இலட்சம் கோடி முதலீட்டில் 508 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படுகிறது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை அகமதாபாத் இடையிலான இந்த ரயில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா - நாகர் வேலி ஆகிய பகுதிகளை இணைக்க கூடியதாக இருக்கிறது.
இந்த புல்லட் ரயில் ஒரு மணி நேரத்தில் 320 கிலோமீட்டர் வேகத்திற்கு பயணிக்கக்கூடும். நேஷனல் ஹை ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்த புல்லட் ரயில் பாதை கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கப் பாதைகள் ,தூண்கள், அடித்தளங்கள் போன்றவற்றை கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும் இந்த ரயில் 10 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications