இந்தியா அனைத்து துறைகளிலும் உற்பத்தியை அதிகரித்துச் சீனாவைப் போல் ஏற்றுமதி நாடாக மாற வேண்டும் எனத் திட்டமிட்டு மேக் இன் இந்தியா, PLI எனப் பல திட்டங்கள் சலுகைகளை அறிவித்துள்ளது.
இதில் முக்கியமான இந்தியா ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளது.
இப்படி இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டது தான் கலாஷ்னிகோவ்-வின் புதிய ரகத் துப்பாக்கி.
கலாஷ்னிகோவ் ஏகே 203
ரஷ்யாவின் புதிய ரகக் கலாஷ்னிகோவ் ஏகே 203 துப்பாக்கியின் மாஸ் ப்ரொடெக்ஷன் இந்தியாவில் செய்ய உள்ளதாக ரஷ்ய அதிகாரி திங்கட்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவின் AK-203 ரகத் துப்பாக்கி மிகவும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது மறுப்பதற்கு இல்லை.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோர்வா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் கலாஷ்னிகோவ் ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கப்பட உள்ளதாகவும், இந்தத் துப்பாக்கியை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.
100% மேக் இன் இந்தியா
உதிரிப்பாகங்கள் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படமாட்டாது என ரஷ்ய அரசின் சர்வதேச ஆயுத வர்த்தக ஏஜென்சியான Rosoboronexport அமைப்பின் தலைவர் அலெக்சாண்டர் மிகீவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - இந்தியா கூட்டணி
ரஷ்யா - இந்தியா கூட்டணியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோர்வா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் முதல் கட்டமாகக் கலாஷ்னிகோவ் ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கப்பட்டாலும், அடுத்தடுத்து இதன் உற்பத்தி அதிகரிக்கவும், மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உற்பத்தி
இதோடு கலாஷ்னிகோவ் ஏகே 203 துப்பாக்கிற்கு அடுத்து வரும் புதிய ரகத் துப்பாக்கியும் இந்தத் தொழிற்சாலையில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரஷ்யா - இந்தியா நட்புறவு அடுத்தகட்டத்திற்குச் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, மேலும் 2022 இறுதியில் ஏகே 203 துப்பாக்கி உற்பத்தி துவங்க உள்ளது.
இலக்கு
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஏற்றுமதிகளை இந்தியா செய்துள்ளது. இந்த ஏற்றுமதி அளவை 2025ஆம் ஆண்டுக்குள் 35,000 கோடி ரூபாய் வரையில் உயர்த்தி மத்திய அரசு தனது இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications