அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, தெற்காசிய நாடும் ரஷ்யாவும் சீனாவிடம் 'தோல்வியடைந்துவிட்டன என்று அவர் கூறியிருந்த போதிலும், தற்போது இந்தியாவுடன் வர்த்தக முன்னணியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தனது சமூக ஊடகப் பக்கம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம், இந்தியாவிற்கு எதிராக 100% வரை புதிய வரிகளை விதிக்கும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தியான்ஜின் நகரில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஒருமித்த நிலைப்பாட்டையும், நடப்புறவையும் வெளிப்படுத்தினர். இந்த மூவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி மேற்கத்திய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, மூவரும் அமெரிக்காவிற்கு எதிராக 'சதி' செய்ததாக டிரம்ப் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

விரைவில் மோடியைச் சந்திக்கிறார் டிரம்ப்: உலகளவில் நடந்து வரும் புவிசார் அரசியல் மத்தியில், உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக வரியை விதித்தது தாண்டி அமெரிக்கா இந்தியாவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியுடனான சந்திப்பை விரைவில் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
என்னுடைய நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் அடுத்த சில வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டார். நமது இரு பெரிய நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தக உறவில் வெற்றிகரமான முடிவுகள் எடுப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
FTA ஒப்பந்தம்: அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் பாதியில் சிக்கியதால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா இரண்டாம் நிலைத் தடைகளால் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, அமெரிக்காவிற்குள் வரும் இந்தியப் பொருட்கள் மீதான வரிகளில் 50% அளவுக்கு மிகக் கடுமையான வரித் தாக்கம் ஏற்பட்டது.
தற்போதுள்ள வரிகளுக்கு கூடுதலாக, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையின் படி, இந்தியாவின் மீது இன்னும் அதிக வரிகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலை இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த முறை, சீனாவும் இந்த வரிவிதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதேவேளையில் இந்தியாவை காட்டிலும் சீனா தான ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை அதிகமாக வாங்கி வருகிறது, ஆனால் அமெரிக்கா சீனா மீது எவ்விதமான வரியையும் விதிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, முன்னதாக சீனாவை விட்டுவைக்கவில்லை என்றும், அதேசமயம் இந்தியாவை அதிக அளவில் பாதிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
100% கூடுதல் வரி அச்சுறுத்தல்: ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை சீனா மற்றும் இந்தியா இரண்டிற்கும் 100% வரை வரிகளை விதிக்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் குறிப்பிட்டு உள்ளது. இது, உக்ரைனில் அதன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது வர்த்தக ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று அமெரிக்க அதிகாரிகளும், ஐரோப்பிய ஒன்றிய தூதர்களும் தெரிவித்துள்ளனர்.
ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, டிரம்ப் தனது செய்தியை ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் தூதர் டேவிட் ஓ'சல்லிவன் மற்றும் பிறருக்கு ஒரு மாநாட்டு அழைப்பு மூலம் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறு செய்தால், இதேபோன்ற வரிகளை விதிக்கும் நாடுகளை அமெரிக்கா தாக்கும் என்றும் அந்தத் தூதர் தெரிவித்தார்.
டிரம்ப் ஒருப்பக்கம் இந்தியா முக்கியம், இந்தியா உடனான நட்புறவு முக்கியம் என பேசும் டிரம்ப் மறுப்புறம் இந்தியா மீது 100 சதவீதம் வரையில் வரியை விதிக்க ஐரோப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதேபோல் சீனா மீது வரி விதிக்காத டிரம்ப், தற்போது ஐரோப்பாவை சீனா மீத வரி விதிக்க கட்டாயப்படுத்துகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications