போரூர் + செங்கல்பட்டு.. லட்டு மாதிரி வந்த ரூ.1000 கோடி.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய விஷயம்!

தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்தியிலான கடும் போட்டிக்கு இடையில், தமிழ்நாடு அரசு இன்று முக்கியமான முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசும், ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜிஸ் நிறுவனம் மத்தியில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்த முதலீடு போரூர் மற்றும் செங்கல்பட்டில் ஏற்கனவே இருக்கும் ஹிட்டாச்சி இந்தியா லிமிடெட் தளத்தை விரிவாக்கம் செய்வதற்காக முதலீடு செய்யப்பட உள்ளது. ஹிட்டாச்சி நிறுவனம் இந்த 1000 கோடி ரூபாய் முதலீட்டை இந்த இரண்டு தளத்திலும் அடுத்த 3-5 வருடம் வரையிலான காலக்கட்டத்தில் முதலீடு செய்து 1000 பேருக்கு உயர் தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

போரூர் + செங்கல்பட்டு.. லட்டு மாதிரி வந்த ரூ.1000 கோடி.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய விஷயம்!

கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடந்த சிஐஐ கூட்டத்தில் பேசிய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, முந்தைய திமுக அரசு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுமார் 25 சதவீத ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறவில்லை, ஆனால் விஜய் தலைமையிலான அரசு ஒவ்வொரு ஒப்பந்தமும் முதலீடாக மாறுவதை உறுதி செய்யும் அதாவது 100% சக்சஸ் ரேட் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என தெரிவித்தார்.

திமுக அரசு கடந்த ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 1179 ஒப்பந்தங்களில் சுமார் 73.53 சதவீத ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறியுள்ளது. இந்திய அளவில் பார்க்கும் போது எந்தொரு மாநிலமும் இத்தகை கன்வெர்ஷன் ரேட் இல்லாத நிலையில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

போரூர் + செங்கல்பட்டு.. லட்டு மாதிரி வந்த ரூ.1000 கோடி.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய விஷயம்!

இதை நிலையில் தான் ஏற்கனவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் நிறுவனத்திற்கு 1000 முதலீட்டை விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இன்று முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அமைச்சர் கீர்த்தனா, தலைமை செயலாளர் எம்.சாய் குமார், கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பும் மற்றும் ஹிட்டாச்சி நிறுவனத்தின் தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஹிட்டாச்சி நிறுவனம் போரூரில் தனது குளோபல் டெக்னாலஜி அண்ட் இன்னோவேஷன் சென்டர் வைத்துள்ளது, செங்கல்பட்டில் முக்கியமான உற்பத்தி தளத்தை வைத்துள்ளது. இத்தொழிற்சாலையில் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு தேவையான ஹைய் வோல்டேஜ் டைரெக்ட் கரன்ட் மற்றும் பவர் குவாலிட்டி உபகரணங்களை தயாரித்து வருகிறது.

இந்த 1000 கோடி ரூபாய் முதலீட்டுக்காக ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணு நுகரி, தலைமை வளர்ச்சி அதிகாரி கார்திக் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதல்வர் விஜயை சந்தித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+