ரூ.1000 நோட்டுக்கும் இந்தியாவிற்கு ஏழாம் பொருத்தம்.. என்னதான் காரணம்..!!

இந்தியாவில் ஒரு காலத்தில் ரூ.5000 மற்றும் ரூ.10000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஆனால் இப்போது அவை இல்லை. என்ன ஆனது? அதிக மதிப்புள்ள நோட்டுகளை அரசு வெளியிட காரணம் என்ன? அதிக மதிப்புள்ள கரன்சிகள் வருமா? என்ற கேள்விகள் பலருக்கும் இப்போதும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று இந்தியாவில் மதிப்புமிக்க கரன்சி எது என்று கேட்டால், 500 ரூபாய் என்றுதான் பதில் வருகிறது.

சில மாதங்களுக்கு முன் கேள்வி கேட்டிருந்தால் 2000 என்று பதில் வந்திருக்கும். 2016ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் இவை செப்டம்பர் 30, 2023க்குள் படிப்படியாக அகற்றப்பட்டது. ஆனால், அது இந்தியாவின் மதிப்புமிக்க கரன்சியாக இருந்ததா? என்பதுதான் கேள்வி. வரலாற்றைப் பார்த்தால் இல்லை என்பதே பதில்.

 ரூ.1000 நோட்டுக்கும் இந்தியாவிற்கு ஏழாம் பொருத்தம்.. என்னதான் காரணம்..!!

அதேபோல், நமது நாட்டில் ரூ. 1000 நோட்டுக்கள் பல முறை ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் ரூ.1000 நோட்டுக்களே அதிக முறை நமது இந்தியாவில் தடை செய்யப்பட்ட வரலாறு படைத்துள்ளது. ஆம், 2,000 ரூபாய் நோட்டை வாபஸ் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவு இந்தியாவிற்கு இதுபோன்ற முதல் முடிவு அல்ல. கடந்த 1946 ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 4 முறைக்கு மேல் பணமதிப்பு பணமதிப்பிழப்பு செய்துள்ளது. இதில் 1000 ரூபாயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

1946ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு:
இரண்டாம் உலகப் போர் மற்றும் கறுப்புச் சந்தை நடவடிக்கைகளின் அதிகரிப்பைக் காரணம் காட்டி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் சிந்தமன் துவாரகநாத் தேஷ்முக்குடன் கலந்தாலோசித்த பிரிட்டிஷ் அரசாங்கம், ரூ.500 மற்றும் ரூ.1000 அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று முடிவு செய்தது.

இது பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து உட்பட பல வெளிநாடுகளில் இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசு ஜனவரி 1946 இல் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று முடிவு செய்தது என்று ரிசர்வ் வங்கி குறிப்புகள் காட்டுகின்றன. அந்த வகையில், ஜனவரி 12, 1946 அன்று, 500, 1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து இரண்டு அவசரச் சட்டங்கள் வெளியிடப்பட்டன.ஆனால், தொடர்ந்து 1954 இல், இவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

1978 ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு:
முன்னாள் தலைமை நீதிபதி கைலாஷ் வாஞ்சூ தலைமையிலான அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நேரடி வரி விசாரணைக் குழுவான வாஞ்சூ கமிட்டி, 1970 முந்தைய காலத்தில், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், பரவுவதைத் தடுக்கவும் சில நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய பரிந்துரைத்தது. அதன்படி 8 ஆண்டுகள் கழித்து 1978 ஆண்டு ஜனவரி 16 அன்று ரூ.1000 ரூ.5000 மற்றும் ரூ.10000 நோட்டுக்களை பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கம் உயர் மதிப்புடைய வங்கி நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் அவசரச் சட்டம், 1978 இன் கீழ் மதிப்பிழக்கச் செய்தது.

இதற்கு பிப்ரவரி 28, 1978 அன்று நிதியமைச்சர் எச்.எம். படேல் தனது பட்ஜெட் உரையில், சட்டவிரோத பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தவும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராகவும் அரசாங்கம் எடுத்த தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த முடிவு என்று கூறினார்.

2014: 2005க்கு முன் வெளியிடப்பட்ட நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டன
அதேபோல், ஜனவரி 22, 2014 அன்று, ஆர்பிஐ மார்ச் 31, 2014க்குப் பிறகு, 2005 ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாகக் கூறியது. இது ஏப்ரல் 1, 2014 முதல், இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகளை அணுக உத்தரவிட்டு கால அவகாசம் வழங்கியது. 2005க்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுக்கள் குறைந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியது. அதேபோல், 2005 ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட நோட்டுக்களில் மக்கள் அடையாளம் காண உதவும் வகையில், இந்த நோட்டுகளின் பின்புறம் அச்சிடப்பட்ட ஆண்டு இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016: ரூ.500, ரூ.1000 மதிப்பிழப்பு:
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஒரே நேரத்தில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை வெளியிடுவதாக அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்தன.

இந்த பணமதிப்பிழப்பு முடிவை அறிவிக்கும் போது, ​​பிரதமர் மோடி, இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றில் சட்டவிரோதமான மற்றும் கருப்பு பணத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்கும் என்றும், கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என்று பிரதமர் கூறினார்.

மே 19, 2023: சுத்தமான நோட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30, 2023 வரை வங்கிக் கிளைகள் அல்லது நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்த ரூ.10000 நோட்டுகள்?
ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட அதிக மதிப்புள்ள நோட்டு 2000 ரூபாய் அல்ல. இந்தியாவில் ஒரு காலத்தில் ரூ 5000 மற்றும் ரூ 10000 கரன்சிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய மூத்த தலைமுறையினர் கூட இதை ஆச்சர்யமாக கருதலாம். ஆனால் அது உண்மைதான். இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட அதிக மதிப்புள்ள நாணயமாக 10000 ரூபாய் சாதனை படைத்துள்ளது.

கடந்த 1938ல் ரிசர்வ் வங்கி முதன்முதலில் 10000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் இவை ஜனவரி 1946 இல் ரத்து செய்யப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, அவை 1954 இல் மீண்டும் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் 1978 இல் மீண்டும் தடை செய்யப்பட்டதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன. பல தசாப்தங்களாக இந்தியாவில் நாணய மேலாண்மை எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை இந்த வரலாறு விளக்குகிறது.

கடந்த 2014ல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் ரூ.5000 மற்றும் ரூ.10000 நோட்டுகளை மீண்டும் அமல் படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போதைய 1000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்த பரிந்துரை வந்தது. அங்கேயும் பணவீக்கம்தான் தலைக்காட்டியது. ஆனால், இவ்வளவு மதிப்புள்ள நோட்டுகளின் தேவைகள் மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளது.

அப்போதுதான் 2000 ரூபாய் நோட்டு யோசனை வந்தது. எனவே 2016ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்தது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டது போல், விரைவாக அறிமுகப்படுத்தப்படக்கூடிய மாற்று நாணயத்தின் தேவையால் இந்த முடிவு தாக்கம் செலுத்தியது.

கறுப்புப் பணம் மற்றும் பதுக்கல் குறித்த அச்சத்தை காரணம் காட்டி, பெரிய மதிப்புள்ள நோட்டுகள் குறித்து ரகுராம் ராஜன் கவலை தெரிவித்தார். அதிக மதிப்புள்ள நோட்டுகள் மோசடி செய்பவர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் என்று அதிகாரிகள் நம்பினர். இந்தியாவின் சவாலான புவிசார் அரசியல் சூழலில், பெரிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டால், கள்ள நோட்டுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். ரூ.2000 நோட்டை வாபஸ் பெற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போது, ​​இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க ரூ.500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வரும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன, ஆனால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+